வளமான புதுச்சேரி என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் பதவியேற்று பிறகு அனைத்துத் துறை செயலர்கள், உயர் அதிகாரிகளை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளாக புதுவையில் சிறப்பான நிர்வாகத்தை இழந்து விட்டது. மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் சரியாக செயல்படுத்தப்படவில்லை.
கடந்த காலத்தை பற்றி நினைக்காமல் புதுச்சேரி இளைஞர்களின் எதிர்காலத்தை கருதி செயல்பட வேண்டும். குறிப்பாக, பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும். இதற்காக தான் தொழிலாளர் துறை இயக்குநரை முன்னிறுத்தி உள்ளேன். தற்காலத்துக்கு ஏற்றவாறு மாணவ, மாணவிகளின் திறன்களை மேம்படுத்த வேண்டும். விரைவில் தில்லி சென்று மத்திய அமைச்சர் சந்தித்து இதற்கான பணிகளை மேற்கொள்வேன்.மத்திய அரசின் முழு ஆதரவு புதுவைக்கு கிடைப்பதை உறுதி செய்வேன். திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதை முற்றிலும் அகற்றிய முதல் யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை உருவாக்குவோம். முதல்வர் நாராயணசாமியும் 55,000 கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு தேவை. மக்களின் கவனத்தை கவர பிரபலமான நபர் ஒருவரின் ஆதரவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதுச்சேரி மாநிலத்துக்கு சிறந்த அரசு நிர்வாகமே தேவைப்படுகிறது. தூய்மையான, வளமான புதுச்சேரி என்ற நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல பிரபலமான நடிகரான ரஜினிகாந்த்தை விளம்பர தூதராக நியமிக்கலாம். அவர் இப்பகுதியில் மட்டுமல்ல நாடு முழுவதும் பிரபலமானவர். எனவே, அவரை வளமான புதுச்சேரி திட்டத்துக்கு விளம்பர தூதராக நியமிப்பது சிறப்பானதாக இருக்கும். இதுதொடர்பாக எனது வலைப்பூவிலும் பதிவு செய்துள்ளேன் என்றார் கிரண்பேடி.