டெல்லி: காலா திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்ததாவது... காலா படத்தின் கதை தன்னுடைய கதை எனவும், இந்த படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தனது கதையின கரிகாலன் என்று ஏற்கனவே பதிவு செய்து உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தனது கரைப்படியே காலா படம் திரைப்படமாக்கப்பட்டு இருப்பதாவும், மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை ஏற்க முகாந்திரம் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, காலாவுக்கு தடைகோரி ராஜசேகரன் தொடர்ந்த மனு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாகபஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்த காலா படம் வரும் ஜூன் 7 அன்று வெளிவருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.