புதுடெல்லி: இரவு நேரத்தில், உறங்குவதற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக மது அருந்துவதை குறைப்பது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்...
இரவு நேரத்தில் மது அருந்துவது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
மது அருந்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளின்படி, ஒரு நாளின் இறுதியில் அருந்தும் மதுபானத்தைத் தவிர்ப்பது மூளையின் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்த உதவும்.
மேலும் படிக்க | சத்யா நாதெள்ளா மகனின் உயிரை பறித்த பெருமூளை வாத நோயின் அறிகுறிகள்!
ஒவ்வொரு கூடுதல் பானத்திலும், மது அருந்துவதன் எதிர்மறையான விளைவுகள் வலுவாக வளர்கின்றன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
36,000க்கும் மேற்பட்ட வயது வந்தவர்களை கணக்கில் எடுத்துக்கொண்ட இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரெமி டேவியட், இந்த மருத்துவ ஆய்வின் முதன்மை ஆய்வாளர்.
அவரது கருத்துப்படி, "மது குடிப்பதால் மூளையில் ஏற்படும் விளைவு அதிவேகமானது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. எனவே, ஒரு நாளின் இறுதியில் ஒரு கூடுதல் பானம், அன்றைய முந்தைய பானங்களை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது இரவின் இறுதியில் மதுபானத்தை அருந்துவதை தவிர்ப்பது மூளையின் செயல்பாட்டை நீடிப்பதில் பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடும்”.
மேலும் படிக்க | விண்வெளி வீரர்களின் மூளையை மாற்றியமைக்கும் புவியீர்ப்பு விசை
ஒரு நபர் எவ்வளவு அதிகமாக குடிக்கிறாரோ அந்த அளவுக்கு அவரது மூளை சிறியதாகிறது மற்றும் மூளையின் வெள்ளைப் பொருளில் குறைவான இணைப்பு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வாரத்திற்கு ஒரு சில கிளாஸ் ஒயின் போன்ற மிதமான அளவு குடிப்பழக்கம் கூட, மூளைக்கு ஆபத்தானதாக இருக்கும் என்று தோன்றுவதாகவும் ஆய்வு கூறுகிறது.
UK Biobank இல் உள்ள பெரியவர்களின் MRI ஸ்கேன்களின் தரவுத்தொகுப்பை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, மூளையின் ஆயுளையும், மூளையின் செயல்பாடுகள் மற்றும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் படிக்க | Brain Health: இந்த ‘5’ உணவுகள் மூளையை டேமேஜ் செய்யும்
மேலும் படிக்க | திருமண ரிஸப்ஷன் மேடையில் மணமகள் மயங்கி விழுந்து மூளைச்ச்சாவு!
மேலும் படிக்க | மூளை நரம்பு பாதிப்பின் ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால், அலட்சியப்படுத்த வேண்டாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR