Steal and save Earth: வியாழனிடமிருந்து ஆற்றலை திருடி பூமியை காப்பாற்றலாமா?

பூமியின் அனைத்து உயிர்களையும் தக்கவைக்கும் ஆதாரம் சூரியன் தான். ஆனால் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனின் எரிபொருள் தீர்ந்து போகும் காலமும் வரும். அப்போது, சூரியனின் அளவு விரிவடைந்து, பிரம்மாண்டமாகும்போது, அது நமது கிரகமான பூமியை எரித்துவிடும்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 24, 2021, 10:11 PM IST
  • பூமியின் அனைத்து உயிர்களையும் தக்கவைக்கும் ஆதாரம் சூரியன்
  • வியாழனிடமிருந்து ஆற்றலை திருடி பூமியை காப்பாற்றலாமா?
  • நாசாவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி இந்த யோசனையை சொல்லியிருக்கிறார்
Steal and save Earth: வியாழனிடமிருந்து ஆற்றலை திருடி பூமியை காப்பாற்றலாமா?  title=

பூமியின் அனைத்து உயிர்களையும் தக்கவைக்கும் ஆதாரம் சூரியன் தான். ஆனால் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனின் எரிபொருள் தீர்ந்து போகும் காலமும் வரும். அப்போது, சூரியனின் அளவு விரிவடைந்து, பிரம்மாண்டமாகும்போது, அது நமது கிரகமான பூமியை எரித்துவிடும்.  

இந்த இக்கட்டில் இருந்து பூமியை காப்பது எவ்வாறு என்று பலரும் யோசித்து வரும் நிலையில், நாசாவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஒருவர் ஒரு யோசனையை சொல்லியிருக்கிறார். ஆனால் அதை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், கிண்டலடிக்கின்றனர்.

விஞ்ஞானி சூரியனைச் சுற்றி பூமியின் சுழற்சி பாதையின் (Earth's rotational path) ஆரத்தை விரிவாக்க விரும்புகிறார். அதுமட்டுமல்ல, சிறுகோள்களைப் பயன்படுத்தவும், வியாழன் (Jupiter) கிரகத்திடமிருந்து ஆற்றலைத் திருடலாம், பூமியை காப்பாற்ற திருடுவது தப்பில்லை என்றும் அவர் பரிந்துரைக்கிறார்!

நக்கலையும், நையாண்டியையும் எதிர்கொள்ளும் அளவுக்கு முன்னாள் நாசா விஞ்ஞானி என்ன தான் சொன்னார்?

Read Also | Neanderthals: மனிதர்களுடன் உடலுறவு கொண்டதால் நியண்டர்டால்கள் அருகியிருக்கலாம்: ஆய்வு

டேவிட் ஹோல்ஸ் (David Holz) என்ற விஞ்ஞானி Ph.D ஆய்வுப் படிப்பு படித்தவர், நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றிய அனுபவசாலி. அவரது பரிந்துரைகள் உண்மையில் செயல்படுத்தப்பட்டால், பூமி இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு வாழக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது! இது உண்மையாக மாற, மேலும் கணிசமான தொழில்நுட்ப முன்னேற்றம் தேவைப்படும்.

ஹோல்ஸ் தனது புதிய கல்விக் கட்டுரையில் தனது கருத்தை விளக்கியுள்ளார். அவர் இந்த ஆராய்ச்சியை நாசா, கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வெளியிட்டனர்.

ஆய்வின் தலைப்பு "வானியல் பொறியியல் (Astronomical engineering): கிரக சுற்றுப்பாதைகளை மாற்றுவதற்கான ஒரு உத்தி". அவர் தனது யோசனை குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.

"சூரியன் விரிவடையும் போது ஒரு பில்லியன் ஆண்டுகளில் பூமி எரியும். பூமியின் சுற்றுப்பாதையை படிப்படியாக விரிவாக்க வியாழனிடமிருந்து ஆற்றலை நாம் திருட வேண்டும்.   

இதற்கு முன்பும் உலகளாவிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யோசனைகளை ஹோல்ஸ் தெரிவித்துள்ளார். மிக பிரம்மாண்டமான அளவிலான சோலார் பேனல்களை விண்வெளியில் மிகவும் உயரமாக பறக்கவிடவேண்டும். அப்போது, சூரிய கதிர்கள் தடுக்கப்பட்டு பூமியின் வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியும் என்று ஹோல்ஸ் தெரிவித்தார்.

Also Read | Gold from Water: அற்புதமான கண்டுபிடிப்பு! நீரிலிருந்து தங்கத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News