Smiling Sun: சிரிக்கும் சூரியன்! வைரலாகும் நாசாவின் புகைப்படம்! பூமியை பார்த்து லுக் விடும் கதிரவன்

Smiling Sun: சூரியனின் சிரிக்கும் புகைப்படத்தை நாசா படம் பிடித்து வெளியிட்டுள்ளது! நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சூரியனின் சிரிப்பு...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 31, 2022, 03:09 PM IST
  • பூமியை விட 330,000 மடங்கு அதிக எடை கொண்ட சூரியனின் சிரிப்பும் பிரம்மாண்டமானதாக இருக்கிறது
  • பூமியை பார்த்து லுக் விடும் கதிரவன்
  • வைரலாகும் நாசாவின் சிரிக்கும் சூரியன் புகைப்படம்
 Smiling Sun: சிரிக்கும் சூரியன்! வைரலாகும் நாசாவின் புகைப்படம்! பூமியை பார்த்து லுக் விடும் கதிரவன் title=

புதுடெல்லி: நான் சிரித்தால் தீபாவளி என்ற திரைப்பட பாடல் பிரபலமானது. நாம் சிரித்தாலே தீபாவளி என்றால், சூரியன் சிரித்தால் என்னவாகும்? பிரபஞ்சமே அழகாக காட்சியளிக்கும் என்கிறது இணையத்தில் வைரலாகும் புகைப்படம். சூரியனின் அண்மை புகைப்படத்தை நாசாவின் தொலைநோக்கி படம் பிடித்தது. அந்த அரிய புகைப்படத்தை நாசா ட்வீட் செய்துள்ளது. சிரிக்கும் சூரியன் முன் குழந்தைகளாகிய நாம் அனைவரும், சூரியனை ஒரு வட்டமான மஞ்சள்-ஆரஞ்சு வட்டமாக முக்கோணக் கதிர்களுடன் பார்க்க நாசாவின் அறிவியல் அறிவு பயன்பட்ட்டுள்ளது.

நமது நட்சத்திரம் என்று அழைக்கப்படும் சூரியன், புன்னகைக்கும் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது. நாசாவின் தொலைநோக்கி எடுத்த இந்த புகைப்படம்  அக்டோபர் 26 அன்று டிவிட்டரில் வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்ல, சுக்கிரனிலும் உயிர்கள் இருக்கலாம்: விஞ்ஞானிகள்

இதுவரை சுட்டெரிக்கும் சூரியனை மட்டுமே பார்த்த நாம், இப்போது சிரிக்கும் சூரியனை பார்த்து மகிழலாம்.

நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி சூரியனை படம் பிடித்தது. புற ஊதா ஒளியில் பார்த்தால், சூரியனில் உள்ள கரோனல் துளைகள் என்ற இருண்ட திட்டுகள் சூரியன் சிரிப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. உண்மையில், சூரியக் காற்று வேகமான விண்வெளியில் வீசுகிறது, இது சூரியன் சிரிப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது.

இந்த புகைப்படம் வெளியானதும், உடனடியாக பல நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளனர். சூரியனைப் பல்வேறு பொருட்களுடன் ஒப்பிட்டு, பலரும் டிவிட்டர் பதிவிட்டு வருகின்றனர்.

 "இனி ஒருபோதும் சிரிக்காதே ப்ளீஸ். வெப்பத்தால் அல்ல, உன் அழகால் மயங்கினேன்" என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

டெலிடூபிகள் ஒரு யதார்த்தமான சூரியனைத் தேர்வுசெய்தால், இதுவாக இருக்கும்." என்று ஒரு நெட்டிசன் சொன்னால், மற்றொருவர், "என்ன ஒரு "சூடான புன்னகை"... என்று சொல்கிறார்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்

பூமி மற்றும் சந்திரனின் இன்னும் பல அரிதான அழகை நாசா கைப்பற்றி உள்ளது. கிட்டத்தட்ட கோள வடிவில் இருக்கும் சூடான பிளாஸ்மா சூரியன் ஆகும்.  இதன் உட்புற வெப்பச்சலன இயக்கமானது இயக்கவியல் செய்முறை மூலம் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. 

புவியில் உயிர்கள் வாழ்வதற்கான ஆற்றல் மூலம் சூரியன் ஆகும். நாம் வசிக்கும் பூமியை விட 109 மடங்கு பெரியது சூரியன். பூமியை விட 330,000 மடங்கு அதிக எடை கொண்ட சூரியனின் சிரிப்பும் பிரம்மாண்டமானதாக இருக்கிறது. 

மேலும் படிக்க | Zero Gravity உள்ள விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News