சிறுகோள் பூமியைத் தாக்கியதில் கொல்லப்பட்ட டைனோசரின் 'பாதுகாக்கப்பட்ட' புதைபடிவத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிறுகோள் பூமியைத் தாக்கிய காலத்தில் உலகில் உயிருடன் இருந்ததாகக் கூறப்படும் டைனோசரின் புதைபடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மெக்ஸிகோ வளைகுடாவில் சிறுகோள் தாக்கப்பட்ட இடத்திலிருந்து 3,000 கிமீ தொலைவில் உள்ள வடக்கு டகோட்டாவில் உள்ள டானிஸில் உள்ள ஒரு புதைபடிவ தளத்தில் தோலால் மூடப்பட்ட தெஸ்செலோசரஸ் என்னும் டைனோசரசின் மூட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சிறுகோள் ஒன்று பூமியில் மோதியபோது டைனோசர்கள் பூண்டோடு அழிந்ததாக அந்த இடத்தில் பணிபுரியும் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
மேலும் படிக்க | நீல திமிங்கலம் போன்ற பிரம்மாண்டமான டைனோசர்களின் புதைபடிமங்கள்
"இது ஒரு தெசெலோசரஸ். இது ஒரு குழுவில் இருந்து வந்தது, அதன் தோல் எப்படி இருந்தது என்பதற்கான எந்த முன் பதிவும் எங்களிடம் இல்லை, மேலும் இந்த விலங்குகள் பல்லிகளைப் போல செதில்களைக் கொண்டிருந்தன என்பதை, இந்த புதைப்படிவம் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. அவை இறைச்சி உண்பது போல இல்லை.” என்று லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் தாவரவகை டைனோசர்கள் பற்றிய உலகின் முன்னணி நிபுணரான பேராசிரியர் பால் பாரெட் பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மேலும் படிக்க | 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததற்கான காரணம் இதுவே!
"இது ஒரு விலங்கு போல் தெரிகிறது, அதன் கால் கண நேரத்தில் கிழிக்கப்பட்டது. காலில் எந்த நோய்க்கான ஆதாரமும் இல்லை, நோய்க்குறிகள் எதுவும் வெளிப்படையான இல்லை, கடிபட்ட அடையாளங்களோ, கால்கள் துடைக்கப்பட்டதற்கான எந்த தடயமும் இந்த புதைபடிமத்தில் காணவில்லை."
"எனவே, இது தாக்குதலால் உடனடியாக இறந்த விலங்கு" என்று நம்புகிறோம்.
சிறுகோள் மோதலின்போது,அதிலிருந்து வநத எச்சங்களால் இறந்துபோன மீன்களின் புதைபடிவங்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், ஒரு புதைபடிவ ஆமையையும் குழு தோண்டி எடுத்தது; சிறிய பாலூட்டிகளின் எச்சங்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களும் கிடைத்துள்ளன.
மேலும் படிக்க | அற்புதமான கண்டுபிடிப்பு! நீரிலிருந்து தங்கத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR