Solar Eclipse 2021: பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரங்கள்

சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் ராசி, நட்சத்திரம் எவை என்று தெரிந்துக் கொள்வோம். சில சுலபமான பரிகாரங்கள் மூலம் தோஷ நிவர்த்திப் பெறலாம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 10, 2021, 10:29 AM IST
  • சூரிய கிரகணம் இன்று மதியம் 1 .42 மணிக்கு தொடங்கும்
  • மாலை 6.41 மணி வரை நீடிக்கும்
  • சில சுலபமான பரிகாரங்கள் மூலம் தோஷ நிவர்த்திப் பெறலாம்
Solar Eclipse 2021: பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரங்கள்   title=

சூரியன் பூமிக்கு இடையே சந்திரன் ஒரே நேர் கோட்டில் வருவதால் சூரிய கிரகண நிகழ்வு ஏற்படுகிறது. இந்த ஆண்டு சூரிய கிரகணம் இன்று. 2021 ஜூன் 10ம் தேதி வைகாசி அமாவாசை 27ம் தேதியான இன்று மதியம் 1 .42 மணிக்கு தொடங்கும் கிரகணம் மாலை 6.41 மணி வரை என ஐந்து மணி நேரம் வரை நீடிக்கும்.

சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் ராசி, நட்சத்திரம் எவை என்று தெரிந்துக் கொள்வோம். சில சுலபமான பரிகாரங்கள் மூலம் தோஷ நிவர்த்திப் பெறலாம்.  

சூரிய கிரகணம் ஏற்படும் நேரத்தைப் பொருத்து அந்த நேரத்தில் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அது  மற்றும் அதற்கு முன் மற்றும் பின் உள்ள நட்சத்திரங்களை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு இருக்கும். இன்றைய கிரகணம் ரிஷப ராசியில் உள்ள மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது.

Also Read | சூப்பரான வெள்ளரிக்காய்ப் பாயசம் செய்வது எப்படி? இப்படித்தான்…

எனவே ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரம் என அனைவரும் பரிகாரம் செய்வது நல்லது.

சூரிய கிரகண நிகழ்வானது சூரியன் - சந்திரன் - பூமி என மூன்று கிரகங்களும் நேர்கோட்டில் வரும்போது ஏற்படுவது. பூமியில் வாழும் மனிதனின் மனதை சந்திரனும், ஆன்மாவை சூரியனும் இயக்குவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய கிரகண நேரத்தில் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைவதால் அப்போது செய்யும் வழிபாடுகள் நல்ல பலனைத் தரும்.

எனவே, வழக்கமாக நாம் செய்யு பூஜை, தியானத்தைவிட கிரகண நேரத்தில் அதிகமாக அதுவும் மனம் ஒன்றி செய்ய வேண்டும். பூஜை செய்யவில்லை என்றாலும், அவரவர் இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தாலே போதும்.  அதோடு, ‘ஓம் நமோ நாராயணா, ஓம் நமசிவாயா, ஓம் பிரம்மதேவாய நமஹ, ஜெய் ஸ்ரீ ராம், ராம ஜெயம்’ போன்ற மந்திரங்களை உச்சரிக்கலாம். 

Also Read |  Healthy Juice: ஆண்மையை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட பீட்ரூட்

கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இறை நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது நல்லது. கிரகண நேரத்தில் உணவை தவிர்ப்பது நல்லது. தேவையென்றால், எளிதில் செரிமாணம் ஆகக்கூடிய பழ சாறு அருந்தலாம்.

கிரகண நேரத்தில் தூங்கக்கூடாது. வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை கண்டிப்பாகப் பார்க்கக் கூடாது. தம்பதிகள் உடலுறவை தவிர்க்க வேண்டும்.கிரகணம் முடிந்ததும் வீட்டை சுத்தம் செய்த பிறகு குளிக்க வேண்டும்.  

Also Read | Danger! வீட்டைச் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களால் ஆபத்து!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News