லண்டன்: 'அழியாத உயிரினம் என்று அழைக்கப்படும் நீர்க் கரடிகள்' எவ்வாறு இறக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். கொதிக்கும் நீராலோ அணுகுண்டுகளாலோ கொல்ல முடியாத உயிரினத்தை நத்தையால் கொன்றுவிட முடியும் என்ற ரகசியத்தை அவிழ்த்துள்ளனர் விஞ்ஞானிகள்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நுண் விலங்குகள் இனத்தைச் சார்ந்த நீரில் வாழும் விலங்கு நீர்க் கரடி டார்டிகிரேட்ஸ் (Tardigrade). இவை, மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த சூழலில் வாழக்கூடியவை. ஆனால் நத்தை வெளியிடும் திரவத்தால் இவை இறக்கக்கூடும் என்ற ரகசியத்தை ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார்.
உலகில் எந்த உயிரினத்தாலும் வாழ முடியாத மிக மோசமான சூழ்நிலையிலும் உயிர்வாழும் திறன் கொண்ட அந்த நுண்ணிய உயிரினமான நீர்க் கரசியை கொல்லும் சக்தி, நத்தை வெளிவிடும் திரவத்திற்கு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | குள்ள கிரகம் புளூட்டோவில் பனி எரிமலைகள்
போலந்தின் ஆடம் மிக்கிவிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த மரண ரகசியத்தை கண்டறிந்தனர். நத்தை வெளிவிடும் திரவத்தை எதிர்கொள்ளாத உயிரினங்களில் 98 சதவீதம் உயிர் பிழைத்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால், மிகவும் நுண்ணிய நீர்க் கரடிகள் நத்தைகளில் இருந்து வெளியாகும் திரவத்தில் மூச்சுத் திணறி உயிரிழக்கின்றன.
ஆனால், நீர்க் கரடிகள் நத்தைகளுக்கு நெருக்கமானவை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உண்மையில், நீர்க் கரடிகள் மிகவும் சிறியதாக இருப்பதால் நீண்ட தூரம் செல்ல முடியாது, அவை நீண்ட தூரம் பயணிக்க நத்தையின் ஓடுகளையே பயன்படுத்துகின்றன.
நீர் கரடிகள் 0.02 அங்குல நீளம் மற்றும் எட்டு கால்கள் கொண்ட உயிரினம் ஆகும். மிகவும் சிறியதாக இருக்கும் இந்த நுண் விலங்கை நுண்நோக்கி உதவியுடன்தான் பார்க்க முடியும். 1773 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த உயிரினம், உறைந்து போன குளிரிலும் இனப்பருக்கம் செய்யும் தன்மையைப் பெற்றது என்பது அதிசயமான உண்மையாகும்.
மேலும் படிக்க | பூமியை சிறுகோள் தாக்கியதால் உயிரிழந்த டைனோசரின் புதைபடிமம்!
8 கால்கள் கொண்ட இந்த விலங்கு நடப்பது கரடி நடப்பது போலவே இருக்கும் என்பதால் இவை நீர்க் கரடி என்று அழைக்கப்படுகிறது.
உணவும் தண்ணீரும் இல்லாமல் 30 ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியும் இந்த அபூர்வ விலங்கு, நீர்ச்சத்து ஒரு சதவீதத்திற்குக் கீழ் குறையும்போதுதான் மரணமடையும் என்று விஞ்ஞானம் கூறுகிறது.
150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாழும் திறன் படைத்த நீர்க் கரடி, மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் வாழக்கூடியவை. 5,000 அலகு கதிரியக்கத்தையும் தாங்கக்கூடிய தன்மையை பெற்ற நீர்க் கரடிகள், வெயில், மழை, பனி, புயல், தகிக்கும் எரிமலைகள், பனிபடர்ந்த மலைகள், ஆழ்கடல்கள், காற்றே இல்லா வான்வெளி என எல்லா இடங்களிலும் வாழும் தகவமைப்பை பெற்றவை.
இமயமலையில் 6,000 மீட்டர் உயரத்தில் பனி உறைந்த பிரதேசத்திலும், ஆழ்கடலில் 4,000 மீட்டர் ஆழத்தில் இவை வாழ்கின்றன. ஆராய்ச்சிக்காகச் சில நீர்க்கரடிகளை வான் வெளியில் வைத்து பராமரிக்கப்பட்டன. வான்வெளியில் பத்து நாட்கள் இருந்த பிறகு மீண்டும் பூமிக்கு எடுத்து வந்தபோதும் நீர்க்கரடி சாகவில்லை. ஆனால், நத்தை வெளிவிடும் திரவம் இதற்கு எமனாக இருக்கிறது என்பது ஆச்சரியமான அறிவியல் உண்மை.
மேலும் படிக்க | தோனி செய்த அந்த மறக்க முடியாத விசயம்! நினைவிருக்கிறதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR