செவ்வாய் கிரகத்திற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் விண்கலன் திட்டம் ஒத்திவைப்பு!!

ஜப்பானில் இருந்து ஏவப்படவிருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் விண்கலன் திட்டம் வானிலையின் காரணமாக ஒத்திப்போடப்பட்டது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 15, 2020, 07:27 PM IST
  • மோசமான வானிலை காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸின் விண்கலன் ஏவும் திட்டம் ஒத்தி வைப்பு
  • ஐக்கிய அரசு அமீரகத்தின் Mars orbiterக்கு Amal அல்லது Hope என்று பெயரிடப்பட்டுள்ளது
  • ஏற்கனவே ஒரு முறை திட்டம் தள்ளிப்போடப்பட்டுள்ளது
செவ்வாய் கிரகத்திற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் விண்கலன் திட்டம் ஒத்திவைப்பு!! title=

டோக்கியோ: ஜப்பானிய ஏவுதளத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸின் விண்கலன் ஏவும் திட்டம் ஒத்திப் போடப்பட்டுள்ளது.  இரண்டு நாட்கள் முன்னதாகவே ஏவப்படவதாக திட்டமிடப்பட்டிருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸின் விண்கலன் ஏவும் பணியானது மேலும் சில நாட்களுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது. 

Amal அல்லது Hope என்று பெயரிடப்பட்டுள்ள ஐக்கிய அரசு அமீரகத்தின் முதல் Mars orbiterஇன் பயணம் வானிலையின் காரணமாக மீண்டும் தாமதமாகியுள்ளது.

தெற்கு ஜப்பானில் உள்ள Tanegashima Space Centre-இல் (தனேகாஷிமா விண்வெளி மையம்) இருந்து வெள்ளிக்கிழமைன் ஏவப்படவிருந்த இந்த ஆர்பிட்டர் ஏற்கனவே புதன்கிழமை ஏவுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

தேதி குறிப்பிடாமல் விண்கலன் ஏவும் திட்டம் மேலும் ஒத்திப் போடப்படுவதாக H-IIA ராக்கெட் வழங்குநர் Mitsubishi Heavy Industries (மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ்) தெரிவித்துள்ளது.

Also Read | பெண் வேடத்தில் களமிறங்கி கிளார்க்காக பணியாற்றும் எந்திரன் ரோபோ!!

ஜூலை மாதம் ஆர்பிட்டர் ஏவப்படும் என்று ஐக்கிய அரபு எமிரேட் மிஷன் குழு, தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்தது. வழக்கமாக திட்டமிடப்பட்ட தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அதே நடைமுறை பின்பற்றப்படும் என்றும் மிட்சுபிஷி கூறியது.

அடுத்த சில நாட்களில் இடைவிடாத மின்னல் மற்றும் மழை பெய்யும் என்று கணிக்கப்படுவதால், ஆர்பிட்டரை ஏவுவதில் மேலும் காலதாமதம் ஆகும் சாத்தியம் இருப்பதாக மிட்சுபிஷி அதிகாரி கீஜி சுசுகி இந்த வார தொடக்கத்திலேயே கூறியிருந்தர்.

ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் அதிகமாக பலத்த மழை பெய்து வருகிறது. தெற்குப் பகுதியில் உள்ள பிரதான தீவான கியூஷுவில் (Kyushu) பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் உருவான 50வது ஆண்டு  2021 பிப்ரவரியில் வருகிறது. அதை கொண்டாடும் விதமாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலனை அனுப்ப அந்நாடு முடிவு செய்திருந்தது.

Also Read | பூமியை நெருங்கும் அரிய NEOWISE வால்நட்சத்திரத்தை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியுமா?

எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தை கொண்டிருக்கும் ஐக்கிய அரசு அமீரகம், விண்வெளியில் கால் பதிப்பது,  அந்நாட்டின் எண்ணெய் சார்புத் தன்மையை மாற்றும் முயற்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது.  

Hope, வளிமண்டலத்தின் மேல் பகுதியை படிப்பதற்கும் காலநிலை மாற்றத்தைக் கண்காணிப்பதற்கும் மூன்று கருவிகளைக் கொண்டுள்ளது.  

சிவப்பு கிரகம் எனப்படும் செவ்வாய்க் கோளை Hope குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு சுற்றிவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முதன்முறையாக வெவ்வேறு பருவங்களில் செவ்வாய் வளிமண்டலத்தின் முழுமையான பார்வையை இது வழங்கும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கூறுகிறது.

அமெரிக்காவும், சீனாவும் செவ்வாய் கிரக பயணங்களுக்கு திட்டமிட்டுள்ளன.  ஜப்பான் தனது சொந்த செவ்வாய் கிரகத்திற்கான பயணத்தை 2024ஆம் ஆண்டில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

Trending News