ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கீடு ரத்து!

ஸ்டெர்லைட்  ஆலை இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கு சிப்காட் மூலமாக ஒதுக்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Last Updated : May 29, 2018, 10:54 AM IST
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கீடு ரத்து! title=

ஸ்டெர்லைட்  ஆலை இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கு சிப்காட் மூலமாக ஒதுக்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாயன்று துவங்கி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை சற்று முன்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சிப்காட் மூலமாக 342.22 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஸ்டெர்லைட்டுக்கு சிப்காட் நிர்வாக இயக்குனர் நிலம் ஒதுக்கீடு ரத்து குறித்து அவசர கடிதம் எழுதியுள்ளார். 

ஸ்டெர்லைட் அலையால் உடல்நலம் பாதிப்பு என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பொதுமக்கள் புகாரை அடுத்து ஆலை விரிவாக்க நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Trending News