'எதுக்கு அடிச்சாங்கனே தெரியல...' முகத்திலேயே மிதி வாங்கிய பெண் - போதை பெண்களின் அடாவடி

குடிபோதையில் இருந்த நான்கு பெண்கள், கொடூரமாக ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.   

Written by - Sudharsan G | Last Updated : Nov 7, 2022, 06:27 PM IST
  • இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நடந்துள்ளது.
  • 4 பெண்களும் குடிபோதையில் இருந்ததாக தகவல்.
  • இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
'எதுக்கு அடிச்சாங்கனே தெரியல...' முகத்திலேயே மிதி வாங்கிய பெண் - போதை பெண்களின் அடாவடி title=

நான்கு பெண்கள் இணைந்து ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளதாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தூரில், ஒரு பெண் கீழே தள்ளிவிட்டு, பெல்ட்டை வைத்து அடிக்கும் வீடியோ ஒன்று வைரலானது. 

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 4) அன்று நள்ளிரவு 1 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கும் பெண்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்கள் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் முடியை பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், காலால் மிதித்தும் கொடூரமாக தாக்கினர். அங்கிருந்த பலரும் அவர்கள் தாக்குவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். 

மேலும் படிக்க | நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்: குரங்கின் வேற லெவல் மாஸ் ரியாக்‌ஷன், வைரல் வீடியோ

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், தன்னை எதற்காக அவர்கள் அடித்தார்கள் என்ற தெரியவில்லை என புகாரில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். புகாரை அடுத்து, ஆபாசமான செயல், வேண்டுமென்றே பிறரை காயப்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் பதிந்துள்ளனர். அந்த பாதிக்கப்பட்ட பெண் இந்தூரில் உள்ள பூச்சி மருந்து கடையில், விற்பனையாளராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். 

மத்தியப்பிரதேசத்தின் அதிக மக்கள் வாழும் நகரமான இந்தூரில், மக்கள் அதிகம் குழுமியிருந்த ஒரு பகுதியில் இத்தகைய சம்பவம் நடந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில், யாரும் பாதிக்கப்பட்ட பெண் குற்றவாளிகளிடம் காப்பற்ற முன்வராதது வீடியோவில் பதிவாகியுள்ளது.  ஆனால், அங்கிருந்தவர்கள் தனது செல்போன்களில் எடுத்த வீடியோக்கள் தான் தற்போது வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஏண்டா இங்கையுமா....மெட்ரோ பிளாட்பாரத்தில் சிறுநீர் கழித்த ஆணின் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News