பொங்கலுக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட Statue of Unity

உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்ற Statue of Unity, உத்தராயணம் அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 13, 2022, 12:17 PM IST
  • வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட Statue of Unity
  • உத்தராயணத்தில் ஜொலிக்கும் சர்தார் பட்டேல்
  • பொங்கலுக்கு அலங்கரிக்கப்பட்ட Statue of Unity சிலை
பொங்கலுக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட Statue of Unity title=

உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்ற Statue of Unity, உத்தராயணம் அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது...

தற்போது, உத்தராயணத்தை (Pongal Festival 2022) முன்னிட்டு உலகின் மிக உயரமான இந்தச் சிலை, விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. அதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, பலரால் பகிரப்படுகிறது.

'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு என்றும் 'அயனம்' என்றால் வழி என்றும் பொருள் ஆகும். சூரியன் தெற்கு திசையிலிருந்து வடக்கு திசை நோக்கி பயணம் செய்யும் காலத்தை உத்தராயணம் என்று சொல்கிறோம். தமிழ் மாதங்களில், தை, மாசி,பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும்.

ALSO READ | கோலம்… இது கலைக்கோலம்… கலாச்சாரக் கோலம்

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், சர்தார் சரோகவர் அணை பகுதியில் கட்டப்பட்டுள்ள, பிரமாண்ட Statue of Unity சர்தார் வல்லபாய் படேல் சிலை உலகிலேயே மிகவும் பெரியது.

இந்த அற்புதமான சிலையைக் காண, நாள் தோறும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ள இந்த சிலையை சுற்றி ஏராளான இயற்கை, செயற்கை நீர் நிலைகள் உள்ளன. சர்தார் சரோவர் அணை நிரம்பினால், அதிலிருந்து வெளியேற்றப்படும் நீர், இந்த நீர் நிலைகளில் சேகரிக்கப்படுகிறது. 

ALSO READ | மேற்கு வங்க மண்ணில் உதித்த ஞான சூரியன் விவேகானந்தர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News