புதுடெல்லி: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவியும், உலகின் பணக்கார பெண்ணுமான மெக்கென்சி ஸ்காட்டுக்கு இது நன்கொடை அளிக்கும் காலம் போலத் தெரிகிறது.
கடந்த நான்கு மாதங்களில் தொற்றுநோயால் பலரது வாழ்க்கை திக்குமுக்காடி உள்ளதாலும், பலரது வாழ்வாதாரமே பறிபோயுள்ளதாலும், இந்த காலகட்டத்தில், நூற்றுக்கணக்கான அமைப்புகளுக்கு சுமார் 4.2 பில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளதாக அறிவித்துள்ளார். அவரது நன்கொடைகள் கடந்த ஆண்டு அவர் கையெழுத்திட்ட 'கொடுக்கும் உறுதிமொழியின்' ஒரு பகுதியாகும்.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், மெக்கென்சி பெசோஸ் என்ற பெயரில் முன்னர் அழைக்கப்பட்ட ஜெஃப் பெசோஸின் (Jeff Bezos) முன்னாள் மனைவி ஸ்காட், இனம், பாலினம், பொருளாதார சமத்துவம் மற்றும் பிற சமூக காரணங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட குழுக்களுக்கு கிட்டத்தட்ட 1.7 பில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக அளித்தார்.
ஏ.எஃப்.பி அறிக்கையின்படி, இந்த ஆண்டு அவர் அளித்த நன்கொடைகளைப் பற்றி விவரிக்கும் ஒரு பதிவில், ஸ்காட், "இந்த கொரோனா (Corona Pandemic) தொற்றுநோய் ஏற்கனவே போராடும் அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஒரு அழிவுகரமான சுழற்பந்தாக இருந்து வருகிறது" என்று கூறினார். பொருளாதார இழப்புகள் மற்றும் சுகாதார விளைவுகள் பெண்களுக்கும், கருப்பின மக்களுக்கும், வறுமையில் வாழும் மக்களுக்கும் மிகவும் மோசமாக உள்ளன" என்று கூறினார்.
ALSO READ: பரிசுகளை வழங்கும் Santa Claus கொரோனா காலத்தில் வைரசை வழங்கினார்: பெல்ஜியத்தில் பரிதாபம்
தொற்றுநோய்களின் போது கோடீஸ்வரர்களின் செல்வம் கிட்டத்தட்ட 80 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அமேசான் (Amazon) நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி ஸ்காட் குறிப்பிட்டார்.
அமெரிக்கா (America) முழுவதும், தொற்றுநோயின் கொடூரப் பிடியால் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் 384 அமைப்புகளை அடையாளம் காண உதவ தான் ஆலோசகர் குழுவை அமைத்ததாகவும் ஸ்காட் மேலும் தெரிவித்தார்.
சமூகங்களில் பசி, வறுமை மற்றும் இன சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடும் அமைப்புகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது என்று ஸ்காட் மேலும் கூறியுள்ளார்.
ALSO READ: 1130 கோடியை லாட்டரியில் வென்ற இந்த ஜோடி தங்களுக்காக வாங்கிக்கொண்டது என்ன தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR