Viral Video: அடித்து விளையாடும் சிங்க குட்டியும் புலிக்குட்டியும்! மனதை கொள்ளை கொள்ளும் வீடியோ!

காட்டில் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. அதிலும், குட்டி விலங்குகள் தொடர்பான வேடிக்கையான மற்றும் மகிழ்ச்சியான வீடியோக்கள் உங்கள் மன அழுத்தத்தை போக்கி விடும் என்றால் மிகையில்லை. 

Last Updated : Dec 14, 2022, 04:19 PM IST
  • காட்டுக்குள் ஒரு குட்டி புலியும் சிங்கக் குட்டியும் விளையாடும் வீடியோ
  • வைரலான வீடியோ "சிங்கம் vs புலி" என்ற தலைப்புடன் Buitengebieden என்ற ட்விட்டர் பயனரால் பகிரப்பட்டது.
  • ஏற்கனவே 800K பார்வைகளைப் பெற்றுள்ளது.
Viral Video: அடித்து விளையாடும்  சிங்க குட்டியும் புலிக்குட்டியும்! மனதை கொள்ளை கொள்ளும் வீடியோ!  title=

சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைத்து மன அழுத்தத்தை போக்குகின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அதிலும் விலங்குகள் மற்றும் அதன் குட்டிகள் தொடர்பான வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிகம் உண்டு. 

காட்டில் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. அதனால் தான் விலங்கு வீடியோக்கள் எளிதில் வைரலாகின்றன.   அதிலும், குட்டி விலங்குகள் தொடர்பான வேடிக்கையான மற்றும் மகிழ்ச்சியான வீடியோக்கள் உங்கள் மன அழுத்தத்தை போக்கி விடும் என்றால் மிகையில்லை. பெரும்பாலும் சமூக ஊடக தளங்களில் வைரலாகும் இந்த வகை வீடியோக்களை நெட்டிசன்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில், காட்டுக்குள் ஒரு குட்டி புலியும் சிங்கக் குட்டியும் விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் புலி குட்டி சிங்க குட்டி வீடியோவை கீழே காணலாம்:

இந்த வைரலான வீடியோவை இன்று காலை "சிங்கம் vs புலி" என்ற தலைப்புடன் Buitengebieden என்ற ட்விட்டர் பயனரால் பகிரப்பட்டது.  இதுவரை இது ஏற்கனவே 800K பார்வைகளைப் பெற்றுள்ளது.

வீடியோவில் சிறிய குட்டிகள் காட்டின் மத்தியில் விளையாடுவதைக் காட்டுகின்றன. அங்கு அவை தங்கள் கால்களால் செல்லமாக அடித்துக் கொண்டு விளையாடுவதையும் தரையில் உருளுவதையும் காணலாம். குட்டிகளின் இந்த அற்புதமான வீடியோ நெட்டிசன்களிடமிருந்து அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: சிங்கத்திடம் தப்பி முதலையிடம் மாட்டிக் கொண்ட எருமை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News