ரயில் செல்லும்போது தண்டவாளத்தில் சிக்கிய நாய்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பும் வீடியோ

Dog viral Video: ரயில் செல்லும்போது தண்டவாளத்தில் சிக்கிய நாய் ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 8, 2023, 06:50 PM IST
ரயில் செல்லும்போது தண்டவாளத்தில் சிக்கிய நாய்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பும் வீடியோ title=

அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட நம்பிக்கையை கடைசி வரை இழக்காமல் இருந்தால் எத்தகைய பிரச்சனையில் இருந்தும் மீண்டு வந்துவிடலாம் என்பதற்கு இந்த நாய் உயிர் பிழைத்த வீடியோவே சாட்சி. ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த நாய்க்கு ரயில் வருவது தெரியவில்லை. திடீரென பார்க்கும்போது ரயில் செல்ல தொடங்கியிருந்தது. அப்போது நாய் ரயில் தண்டவாளங்களுக்கு இடையிலேயே படுத்திருக்கிறது. பயமும், பீதியும் கலந்துவாறு என்ன செய்வதென்றே தெரியாமல் நாய் இருந்தது.

மேலும் படிக்க | அன்னையின் மடியில் சுகம் தேடும் கங்காரு! தாயின் மடியில் பத்து மாசம் பத்தாது வீடியோ

ஆனால், அந்த நாய் நம்பிக்கை ஒன்றை மட்டும் இழக்கவில்லை. அமைதியாக ரயில் செல்லும் வரை காத்திருந்தது. ரயில் செல்கிறதே என அஞ்சியவாறு தப்பிக்க முயற்சி செய்திருந்தால், நிச்சயம் அந்த நாய் உயிரோடு இருக்க வாய்ப்புகள் துளியும் இல்லை. என்ன நடக்கும் என்பதை பொறுமையாக பார்க்கலாம் என கடைசி வரை இருந்த நாய்க்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்த பரிசு தான் உயிர்.

ரயில் சென்றதும் அவ்வளவு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ரயில் தண்டவாளத்தில் இருந்து வெளியே ஓடி வருகிறது அந்த நாய். பார்க்கும் அனைவருக்கும் பூரிப்பை ஏற்படுத்தும் இந்த வீடியோவை ஸ்டாலின் ஐபிஎஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும், "பொறுமையாகவும், நம்பிக்கையுடனும்  இருந்தால் எப்படிப்பட்ட துன்பத்தையும், நமக்கு வரும் ஆபத்தையும் கடந்து மீண்டு வரலாம்.." என்ற நம்பிக்கை வரிகளையும் கேப்சனாக பதிவிட்டுள்ளார்.  

மேலும் படிக்க | சொர்க்கம் பூமியில் வநதுவிட்டதோ? அழகால் அதிசய வைக்கும் நதியின் அதிசய வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News