இந்த வாரம் பிக் பாஸ் இல் இருந்து வெளியேறிய போட்டியாளர் இவரா? வீடியோ ஆதாரம்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 

Written by - ZEE Bureau | Last Updated : Dec 20, 2020, 10:31 AM IST
இந்த வாரம் பிக் பாஸ் இல் இருந்து வெளியேறிய போட்டியாளர் இவரா? வீடியோ ஆதாரம்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 

இந்த நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் (Bigg Boss Tamilவீட்டில் இருக்கும் நிலையில் கடந்த வாரம் இருவர் வெளியேறி உள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் ஒருவர் வெளியேற உள்ளார். இந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜித் (Aajeedh Khalique), அர்ச்சனா, அனிதா, ஷிவானி, ரியோ (Rio Rajமற்றும் சோம் ஆகிய ஏழு பேர்கள் உள்ளனர். 

ALSO READ | பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு சனம் ஷெட்டி வெளியிட்ட முதல் வீடியோ!

இந்நிலையில் தற்போதைய தகவலின் படி, குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அர்ச்சனா (Archana Chandhokeவெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் இன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் டாஸ்க் மற்றும் வாரம் முழுதும் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர். இதில் அர்ச்சனா, ரம்யா, போட்டியாளர்களை ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் அடுத்தவார தலைவர் பதிவுக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ச்சனா வெற்றி பெற்று அடுத்த வார தலைவராக வந்துள்ளார்.

ALSO READ | கொதித்தெழுந்த அனிதா! பதில் கூற முடியாமல் கோபத்துடன் கத்திய ரியோ!

ஏற்கனவே அர்ச்சனா அடுத்த வாரத்திற்கான கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த வாரம் வெளியேறுவது பார்வையாளர்களுக்கு புதிதாக உள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News