பேச்சுலர் பார்ட்டியில் உல்லாசமாய் கலக்கும் பெண்களின் கலாட்டா video viral

இது பெண்களின் பேச்சுலர்ஸ் பார்ட்டி, வீடியோ வைரலாவது அவர்கள் சிங்கிள் பீஸ் உடை அணிந்திருப்பதால் அல்ல...

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 15, 2021, 08:42 AM IST
  • இது பெண்களின் பேச்சுலர்ஸ் பார்ட்டி
  • வீடியோ வைரலாவதற்குக் காரணம் பெண்களின் ஆடையல்ல
  • பயமே நிரந்தரமல்ல!!!
பேச்சுலர் பார்ட்டியில் உல்லாசமாய் கலக்கும் பெண்களின் கலாட்டா video viral

திருமணத்திற்கு முன் பேச்சிலர்ஸ் பார்ட்டி நடத்தும் பெண்களின் வீடியோ வைரலாகிறது. அது பெண்கள் பேச்சிலர்ஸ் பார்ட்டி என்பதால் அல்ல, அவர்களின் பயத்தைப் பார்த்து தான் நெட்டிசன்கள் சிரிக்கின்றனர். வாழ்க்கை என்பதே அனுபவிப்பதற்கு தான்... என்ஜாய் என்று சொல்லும் காலம் இது. திருமணத்திற்கு முன்பு ஆண்கள் மட்டுமே கொடுத்துவந்த பேச்சுலர்ஸ் பார்ட்டி, இப்போது பெண்களும் கொண்டாடும் குதூகல விருந்தாகிவிட்டது.

இந்த வீடியோ witty_wedding என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியாகி, வைரலாகிறது. கையில் மத்தாப்பு ஏந்தி ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கும் பெண்களில் ஒருவர் திடீரென பயந்து போய் ஓடுகிறார். இதைப் பார்த்து தான் நெட்டிசன்கள் சிரித்து, வீடியோவை வைரலாக்குகின்றனர்.

சமூக ஊடகங்களில் தற்போது அதிகம் பார்த்து ரசிக்கப்படும் வீடியோக்களில், திருமணம், பார்ட்டி, நடனம், நகைச்சுவை என பலதரப்பட்ட நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. அவற்றில் சில வேடிக்கையானவை, அவற்றைப் பார்த்தவுடன் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது.

பெண்களின் பேச்சிலர் பார்ட்டியில், ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கும் அழகிகள், பார்ட்டியில் பயன்படுத்தப்படும் மத்தாப்பு வைத்து விளையாடுகின்றனர். நன்றாக போஸ் கொடுக்கின்றனர். பெண்களின் பார்ட்டி அறை பலூன்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் மேஜையில் மது பாட்டில்களும் இருக்கின்றன. அங்கிருக்கும் பெண்கள் அனைவரும் வெண்ணிறத்தில் சிங்கிள் பீஸ் ஆடை அணிந்து இருக்க, பார்ட்டி கொடுக்கும் பெண் மட்டும் மட்டும் வித்தியாசமாய் ஆடை அணிந்திருக்கின்றனர்.

அதில் பார்ட்டி கொடுக்கும் பெண் சிரித்துக் கொண்டே மத்தாப்பு சுற்றிக் கொண்டே, கேக் அருகில் அதை கொண்டு செல்கிறார். திடீரென அது லேசான சப்தத்துடன் வெடிக்கிறது. உடனே பயந்து போன அந்தப் பெண் அங்கிருந்து ஓடுகிறார். பிறகு, அனைவரும் மத்தாப்பு மீது  தண்ணீர் தெளித்து அணைக்க முயல்கின்றனர். இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் சிரிக்கின்றனர். 

பார்ட்டி கொடுக்கும் பெண் பயந்து அங்கிருந்து விலகியதும், அங்கிருக்கும் மற்ற பெண்களும் அச்சமடைவதையும் பார்க்க முடிகிறது. அங்கும் இங்கும் ஓடத் தொடங்குகிறார்கள். இருப்பினும், சில நொடிகளுக்குப் பிறகு அனைவரும் சிரிக்கிறார்கள். இந்த வேடிக்கையான வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள், விதவிதமாய் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

Also Read | பாம்பிடம் மாஸ் காட்டும் ஹீரோவின் Viral Video

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News