மயானத்தில் உலாவும் மலைப்பாம்பு; இணையவாசிகளை அதிர வைத்த வீடியோ!

Python Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களில் சில இணையத்தில் வைரலாகின்றன. அதில் பெரும்பாலானவை பாம்பு வீடியோக்கள் என்றால் மிகையில்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 7, 2022, 10:09 PM IST
  • மயானத்தில் மலைப்பாம்பு ஒன்று உலாவுவதை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • சமூக ஊடகங்களில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களில் சில இணையத்தில் வைரலாகின்றன.
  • பாம்புகளின் வீடியோக்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
மயானத்தில் உலாவும் மலைப்பாம்பு; இணையவாசிகளை அதிர வைத்த வீடியோ! title=

சமூக ஊடகங்களில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களில் சில இணையத்தில் வைரலாகின்றன. அதில் பெரும்பாலானவை பாம்பு வீடியோக்கள் என்றால் மிகையில்லை. இந்த உலகில் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் பாம்புகள் அடங்கும். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழியும் உண்டு. பாம்பு என்றவுடனே பயமும் பதற்றமும் நம்மை தொற்றிக் கொள்ளும். ஆனாலும் பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது எனலாம். ஏனெனில், நேரில் பார்க்க அஞ்சும் பாம்புகளை மிக அருகில் பார்க்க இந்த சமூக வலைத்தள சமூக ஊடக வீடியோக்கள் உதவுகின்றன. பாம்புகள் தொடர்பான பல வித வித்தியாசமான நிகழ்வுகளை நாம் இவற்றில் காண்கிறோம். அந்தவகையில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ சிலரது மனதை நடுங்க வைக்கும். ஏனெனில் இங்கு காட்டப்பட்டுள்ள காணொளியில் மலைப்பாம்பு ஒன்று மயானத்தில் உலா வருவதைக் காணலாம். இந்த காணொளியை பார்த்தவுடன் உங்களுக்கு நடுக்கம் வரும் என்பது மட்டும் உறுதி. 

ஹைதராபாத்தில் உள்ள ஒரு மயானத்தில், 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உலாவுவதை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள குவாத்ரி சாமன் கல்லறையான ஃபலக்னுமாவில் உலாவும் மலைப்பாம்பை, அங்கு வந்த சில உள்ளூர்வாசிகள் படம் பிடித்துள்ளனர். கல்லறைகளுக்கு நடுவில், இரவு நேரத்தில் ராட்சத மலைப்பாம்பு ஊர்ந்து செல்வது போன்ற வீடியோ இணையவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video:நண்டிடம் சிக்கித் தவிக்கும் பாம்பு; மனம் பதற வைக்கும் வீடியோ!

கல்லறையில் ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பின் வீடியோவை கீழே காணலாம்: 

ஹைதராபாத்தில் உள்ள இந்த குறிப்பிட்ட மயானத்தில், வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் வேறு சில நாட்களிலும், இங்குள்ள புளியை பறிக்க மயானத்திற்கு ஏராளமான குழந்தைகள் வருவதால், அச்சமடைந்த பகுதிவாசிகள் ஆபத்தான மலைப்பாம்பை கண்டுபிடித்து வேறு இடத்திற்கு மாற்றுமாறு வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"பலக்னுமாவில் உள்ள கல்லறையில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது" என்ற தலைப்பில் இந்த வீடியோவை சியாசட் டெய்லி பகிர்ந்துள்ளது. சமூக ஊடக பயனர்கள் இந்த வீடியோவை பார்த்த பிறகு, பாம்பு எவரையும் தாக்காமல், அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: சீறும் கருநாகங்களை கூலாக குளிப்பாட்டும் பெண்... இணையத்தை கலக்கும் வீடியோ!

மேலும் படிக்க | கேமராவில் சிக்கிய அற்புத காட்சி; நாகமணியை பாதுகாக்கும் ராஜநாகம்!

மேலும் படிக்க | நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News