இணையத்தை தெறிக்கவிட்ட ஆட்டம்.... சான்சே இல்ல: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்

Funny Dance Video: பல சமயங்களில் சிறு குழந்தைகளும் திருமண விழாக்களில் நடனமாடி விருந்தினர்களை அசத்துவதுண்டு. அப்படி ஒரு அசத்தல் வீடியோ தற்போது வைரல் ஆகி வடுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 5, 2023, 05:28 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் everythingaboutnepal என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளும், ஏகப்பட்ட வியூஸ்களும் கிடைத்துள்ளன.
  • 2.3 மில்லியன் மக்கள் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.
இணையத்தை தெறிக்கவிட்ட ஆட்டம்.... சான்சே இல்ல: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

சமூக ஊடகங்களில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவை நம் உள்ளங்களை கவரும் வண்ணம் இருக்கின்றன. குழந்தைகள் எந்த வித கபடும் சூதும் இல்லாத நல்ல உள்ளங்களை கொண்டவர்கள். இவர்கள் ஒரு வேலையை செய்யும் முன் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. மனம் எதை நினைக்கிறதோ அதை செய்து முடிக்கிறார்கள். 

நடன வீடியோக்களுக்கு இணையத்தில் ஒரு தனி மவுசு உள்ளது. பலர் தங்களது அற்புதமான நடனங்களை இணையத்தில் போஸ்ட் செய்வது உண்டு. சிலர் பிறர் ஆடும் நடனத்தை ரெகார்ட் செய்து பகிர்கிறார்கள். இணையவாசிகளுக்கு பிடித்தமான குழந்தைகளும் நடனமும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும். இவற்றை ஒன்று சேர்த்த ஒரு வீடியோதான் தற்பொது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. 

திருமண விழாக்களில் பலர் நடனமாடும் பல வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆவதுண்டு. இவற்றில் சில வேடிக்கையாக இருந்தாலும், சில நடனங்கள் அபாரமாகவும் இருப்பதுண்டு. பல சமயங்களில் சிறு குழந்தைகளும் திருமண விழாக்களில் நடனமாடி விருந்தினர்களை அசத்துவதுண்டு. அப்படி ஒரு அசத்தல் வீடியோ தற்போது வைரல் ஆகி வடுகின்றது. 

கூலாக நடனமாடும் குழந்தைகள்

இந்த வீடியோவில், ஒரு திருமண விழாவில், ஒரு சிறுவனும் சிறுமியும் மிகவும் கூலாக நடனமாடுவதை காண முடிகின்றது. இதை பார்த்தால் யாராக இருந்தாலும் சிரித்து மகிழ்வார்கள். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் மக்கள் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நடன வீடியோ உங்களை ஆச்சரியப்படுத்தும்

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இந்த இரண்டு குழந்தைகளும் பாரம்பரிய உடை அணிந்து பிரமாண்டமான முறையில் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோவில் டான்ஸ் ஆடி அசத்தும் சிறுவன் வெள்ளை குர்தா அணிந்து கண்ணாடி அணிந்துள்ளார். சிறுமி அழகான லெஹங்கா அணிந்துள்ளார். ஒரு படத்தின் ஷூட்டிங் நடப்பது போல் இருவரும் நடனமாடுகிறார்கள்.

மேலும் படிக்க | Viral Video: முத்தம் கொடுக்க வந்த பெண்ணை பதம்பார்த்த பாம்பு - பாவம் பாப்பா...!

அட்டகாசமான அந்த நடன வீடியோவை இங்கே காணலாம்:

இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்பது போல அபாரமான நடன அசைவுகளை போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்கள். அந்த விழாவிற்கு வந்துள்ள பலர், இவர்களது டான்சை போனில் வீடியோ எடுப்பதை காண முடிகின்றது. இருவரின் முக பாவங்களும், டான்ஸ் ஸ்டெப்ஸ்களும் மிக நன்றாக உள்ளன. 

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் everythingaboutnepal என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளும், ஏகப்பட்ட வியூஸ்களும் கிடைத்துள்ளன.  2.3 மில்லியன் மக்கள் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பெரும்பாலான பயனர்கள் இந்த வீடியோவில் உள்ள இரு குழந்தைகளின் நடனத்தையும் பாராட்டி வருகின்றனர். 

மேலும் படிக்க | சிங்கங்களின் தாக்குதலையே சமாளிச்சிட்டோம், இனி வேற என்ன? மிதப்பில் வரிக்குதிரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News