போட்டோ எடுத்த இளைஞன், கடுப்பான காளை செய்த வேலை: திகிலூட்டும் வைரல் வீடியோ

Bull Attack Viral Video: ‘இது உனக்கு தேவையா’ என இணையவாசிகளை கேட்க வைக்கிறது இந்த வீடியோ. ஒரு இளைஞனின் போட்டோ மோகம் ஆபத்தில் முடிவதை காண பரிதாபமாகவும் பயமாகவும் உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 30, 2022, 05:01 PM IST
  • சாலையில் நின்ற காளையுடன் போட்டோ எடுக்க சென்ற இளைஞன்.
  • கடுப்பான காளை செய்தது என்ன?
  • இளைஞனுக்கு நிகழ்ந்த பரிதாபம்.
போட்டோ எடுத்த இளைஞன், கடுப்பான காளை செய்த வேலை: திகிலூட்டும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்பு ஒரு வினோதமான தொடர்பாகும். இதை விளக்கும் பல வீடியோக்களை நாம் சமூக ஊடகங்களில் தினமும் காண்கிறோம். இவற்றில் சில நம்மால் நம்ப முடியாத அளவுக்கு வியப்பை அளிக்கும். முட்டாள்தனத்தின் அனைத்து எல்லைகளையும் மக்கள் கடக்கும் சில வீடியோக்களையும் நாம் இங்கு காண்கிறோம். 

தற்போதும் இதேபோன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு இளைஞன் செல்ஃபி எடுக்க ஆபத்தான காளையின் அருகே செல்வதையும் அதன் பின் நடக்கும் விபரீதமான விஷயங்களையும் காண முடிகின்றது. இதில் நாம் காணும் விஷயங்கள் நம் மனதை நெருட வைக்கின்றன. 

மேலும் படிக்க | 'வேணாம்..விட்டுடு’: வடிவேலு ஸ்டைலில் கெஞ்சிய பாம்பு, வெச்சி செஞ்ச எறும்புகள், வைரல் வீடியோ 

காளையுடன் செல்ஃபி

வைரலாகி வரும் இந்த வீடியோவில், சாலையில் நிற்கும் காளையின் அருகே ஒரு இளைஞன் செல்வதை காண்கிறோம். அவர் தனது இரண்டு கைகளாலும் காளையின் கொம்பைப் பிடித்து ஒரு நண்பரிடம் தன்னை காளையுடன் புகைப்படம் எடுக்கும்படி கூறுகிறார். ஆனால் காளைக்கு இளைஞனின் இந்த செயல் சிறிதும் பிடிக்கவில்லை. சிறிது நேரம் பொறுமையாக இருக்கும் காளை, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அந்த இளைஞனை தூக்கி வீசுகிறது. 

செல்ஃபி எடுத்த இளைஞனால் கடுப்பான காளையின் வீடியோவை இங்கே காணலாம்: 

வீடியோவைப் பார்க்கும்போது, ​​காளையை சீண்டிய இளைஞனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிந்தது. ஏனெனில் காளை தூக்கி வீசியதில் அந்த இளைஞருக்கு தலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வீடியோ @TheBest_Viral என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

‘காளை செய்தது சரிதான்’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘இந்த சம்பவம் வேடிக்கையாக இருப்பதோடு, திகிலூட்டும் வகையிலும் உள்ளது’ என ஒருவர் யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். விலங்குகளை நாம் தொந்தரவு செய்யக்கூடாது, செய்தால் அதற்கான விளைவை எதிர்கொள்ள நேரிடும் என்ற பாடம் இதில் உள்ளது. 

மேலும் படிக்க | மணப்பெண் தங்கையின் நடனம், ஷாக்கான குடும்பத்தினர்: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News