'வேணாம்..விட்டுடு’: வடிவேலு ஸ்டைலில் கெஞ்சிய பாம்பு, வெச்சி செஞ்ச எறும்புகள், வைரல் வீடியோ

Snake Viral Video: இப்படி கூட நடக்குமா என ஆச்சரியமளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் ஆச்சரியமான விஷயம் ஒன்றை பார்க்க முடிகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 30, 2022, 03:18 PM IST
  • சமூக ஊடகங்களில் பல திடுக்கிடும் வீடியோக்களை நாம் அவ்வப்போது காண்கிறோம்.
  • தற்போது மீண்டும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
  • இந்த வீடியோ ஆபத்தான பாம்பு மற்றும் எறும்புகள் தொடர்பானது.
'வேணாம்..விட்டுடு’: வடிவேலு ஸ்டைலில் கெஞ்சிய பாம்பு, வெச்சி செஞ்ச எறும்புகள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமூக ஊடகங்களில் பல திடுக்கிடும் வீடியோக்களை நாம் அவ்வப்போது காண்கிறோம். தற்போது மீண்டும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ஆபத்தான பாம்பு மற்றும் எறும்புகள் தொடர்பானது. இதைப் போன்ற காட்சியை நீங்கள் முன்னர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

எறும்பின் இருப்பிடத்தில் நுழைந்த பாம்பு

இரை தேடி அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த பாம்பின் பார்வை எறும்புகளின் புற்றின் மீது படுவதை வீடியோவில் காண முடிகின்றது. தனது இரை அந்த புற்றில் இருப்பதாகவும், அதிலிருந்து எளிதாக இரையை பிடுத்து உண்ணலாம் என்றும் பாம்புக்கு தோன்றுகிறது. ஆனால், பாம்பு நினைக்காத பல விஷயங்கள் பின்னர் நடந்துவிடுகின்றன. 

மேலும் படிக்க | மணப்பெண் தங்கையின் நடனம், ஷாக்கான குடும்பத்தினர்: வீடியோ வைரல்

புற்றை நெருங்கிய பாம்பின் நிலை மோசமாகிறது. அது தன் வாழ்வில் மறக்க முடியாத அளவிலான அதிர்ச்சியை எதிர்கொள்கிறது. இரை தேடி அலையும் பாம்பு புற்றை தாக்கியவுடன் அதிலிருந்த எறும்புகள் அதைத் தாக்கத் தொடங்குகின்றன. 

மறுபுறம், எறும்புகளின் தாக்குதலால் அதிர்ந்த பாம்பு, சற்று நேரத்தில் வெளியே வந்து விடுகிறது. புற்றிலிருந்து வெளியே வந்த பிறகும் எறும்புகள் பாம்பை துரத்துவதை நிறுத்தவில்லை என்பது ஆச்சர்யமான ஒரு விஷயமாகும். எறும்புகள் அனைத்தும் பாம்பை மோசமாக கடித்துக் கொண்டே இருக்கின்றன. 

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, பாம்பு தனது வாலை இங்கும் அங்குமாக ஆட்டுகிறது. எனினும், எறும்புகள் பாம்பின் உடலைத் தொடர்ந்து கடித்துக்கொண்டே இருக்கின்றன. தங்கள் இருப்பிடத்திற்கு நுழைந்த பாம்பின் மீது எறும்புகள் மிக கோவமாக இருப்பதை வீடியோவை பார்த்து புரிந்துகொள்ள முடிகின்றது. 

பாம்பை தாக்கும் எறும்புகளின் வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த அதிர்ச்சி வீடியோ சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. இது இன்ஸ்டாகிராமில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ beautiful_new_pix என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | வாடா பாத்துர்லாம் நீயா நானானு, பாம்பை வம்பிழுக்கும் குரங்கு: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News