வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
மந்திரவாதிகள் தங்கள் உயிரை உடலிலிருந்து பிரித்து, பின்னர், தங்கள் வசதிக்கு ஏற்ப மீண்டும் உடலில் சேர்ப்பதை நாம் திரைப்படங்கள் அல்லது சீரியல்களில் பார்த்துள்ளோம். தவமிருந்து பெற்ற வரத்தால் இதெல்லாம் செய்ய முடிகிறது. ஆனால் இது நிஜத்தில் நடப்பதை பார்த்ததுண்டா?
இல்லை என்றால், உங்களுக்காகவே சமூக வலைதளங்களில் இப்படிப்படட் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் ஒரு பெண் தரையில் படுத்து, தன் உயிரை, ஆன்மாவை, உடலில் இருந்து பிரிப்பதை காண முடிகின்றது. வீடியோ உணர்ச்சிகளை தூண்டும் வகையில் இருக்கலாம். ஆனால், இந்த வீடியோ வெளிவந்ததிலிருந்து சமூக வலைதள வாசிகள், இது குறித்து பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
மேலும் படிக்க | புற்றுநோய் குணமான ஆசிரியரை உற்சாகமாக வரவேற்கும் மாணவர்கள்- நெகிழவைக்கும் வீடியோ
உடலை விட்டு பிரிந்த உயிர்
சமூகவலைத்தளங்களில் தலைப்புச் செய்தியாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் தரையில் படுத்துள்ளதை காண முடிகின்றது. அவர் கண்களை பெரிதாக வைத்து விரித்து பார்க்கிறார். பின்னர் அவர் உயிர் உடலில் இருந்து உயிர் பிரிவது போன்ற காட்சி தெரிகிறது.
உயிர் வெளிவந்தவுடன் பயங்கரமாக சிரிப்பதையும் காண முடிகின்றது. இப்போது வைரலாகியுள்ள இந்த வீடியோவை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை. ஏனென்றால் வீடியோவைப் பார்த்தால் அந்தப் பெண் ஏதோ ஒரு தொழில்நுட்ப ட்ரிக்கைப் பயன்படுத்தி இதைச் செய்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
திகிலூட்டும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:
உயிர் பிரியும் காட்சி வியக்க வைக்கிறது
இந்த காணொளியை பார்த்த உடனே அனைவரும் வியந்துதான் போவார்கள். எனினும், மீண்டும் மீண்டும் பார்த்த பிறகு தான் இதில் ஏதோ தொழில்நுட்ப ட்ரிக் பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்ப முடியும். ஆனால், சிலர் அப்படி நினைக்காமல், இதை நிஜம் என்றும் நம்புகிறார்கள். இந்த வீடியோ ghantaa என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்படுள்ளது.
இதற்கு பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. ‘உயிர் இப்படி பிரிவதில்லை’ என ஒருவர் எழுதியுள்ளார். இணையவாசிகள் இது போன்ற பல வித ரியாக்ஷன்களை அளித்து வருகின்றனர். இந்த வீடியோ இதுவரை லட்சக்கணக்கான வியூஸ்களையும் ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | அரைநொடியில் அறிவாளியாகும் மந்திரம் - வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR