மேடையிலேயே ‘அதுக்காக’ செல்ல சண்டை போட்ட மணமக்கள்: வேற லெவல் வைரல் வீடியோ

Funny Wedding Video: மணமேடையிலேயே இப்படி ஒரு சண்டையா என ஒரு வீடியோ இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 26, 2023, 03:03 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் bridal_lehenga_designn என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு 15.3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும் ஏகப்பட்ட வியூஸ்களும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மேடையிலேயே ‘அதுக்காக’ செல்ல சண்டை போட்ட மணமக்கள்: வேற லெவல் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது. நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது.  சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். 

மணமகனுக்கும் மணமகளுக்கும் திருமண சடங்குகளின் போது அழகான போட்டி இல்லாமல் இந்திய திருமணங்கள் முழுமையடையாது. திருமண நாளில் மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையில் நடக்கும் செல்ல சண்டையை காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் உள்ளன. சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் மணமகனும், மணமகளும் மாலை மாற்றும் சடங்கின் போது மாலையை முதலில் அணிவிக்க சண்டை இடுவதை காண முடிகின்றது. 

வீடியோவின் துவக்கத்தில் திருமண மேடையில் மணமகனும், மணமகளும் கைகளில் மாலைகளுடன் நிற்பதைக் காண முடிகின்றது. மணமகனும் மணமகளும் ஒருவருக்கு ஒருவர் மாலை அணிவிக்க ஆர்வமாக உள்ளனர். ஆனால், தான் தான் முதலில் மாலை அணிவிக்க வேண்டும் என இருவருக்குமே ஆசையாக இருக்கிறது. இதனால் இருவருக்கும் இடையில் சண்டையே வருகிறது. ஆனால், ஒரு நபர் மணமகனைப் பிடித்துக் கொண்டு இருப்பதையும், இதனால், மணமகளுக்கு மாலை அணிவிப்பதில் சிரமம் ஏற்படுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | Viral Video: 'கற்பூர புத்திப்பா உனக்கு...' இந்த க்யூட் பூனையின் செயலை பாருங்களேன்!

மணமகள் மாலை போட வரும்போது அந்த நபர் மணமகனை மேலே தூக்கிக்கொள்கிறார். அதனால் அவரால் மாலையை அணிவிக்க முடியவில்லை. ஆனால், மணமகனாலும் அத்தனை எளிதாக மணமகளுக்கு மாலை போட முடியவில்லை. இருவருக்கும் இடையில் வலுவான போட்டி நடக்கின்றது. இறுதியில் மணமகன்தான் முதலில் மணமகள் கழுத்தில் மாலை போடுகிறார். பின், மணமகள் தன் கழுத்தில் மாலை போட அவருக்கு உதவுகிறார்.

மணமக்களின் அந்த க்யூட் சண்டையை இந்த வீடியோவில் காணலாம்:

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் bridal_lehenga_designn என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 15.3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும் ஏகப்பட்ட வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘இது என்ன கல்யாணமா இல்லை சர்கசா’ என ஒரு பயனர் வேடிக்கையாக கேட்டுள்ளார். ‘இந்த வீடியோ மிக வேடிக்கையாக உள்ளது’ என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். 

மேலும் படிக்க | பாம்பிடம் சிக்கித் தவிக்கும் பல்லி... காக்க போராடும் துணை... வைரலாகும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News