வீட்டில் வசிக்கும் பூனைக்கு எதிரி எலி என்றால், நண்பன் யாராக இருக்கும் என நீங்கள் யோசித்திருக்கலாம். ஏனென்றால் சிறு வயது முதல் எலிக்கும் பூனைக்கும் ஆகாது என்பதை பலரும் கூறக்கேட்டிருப்பீர்கள். கார்ட்டூன் நாடகங்களில் கூட எலிக்கும் பூனைக்கும் இடையே கடுமையான சண்டை இருப்பது போலவே காட்சிகள் இருக்கும். எலி தான் எதிரி என்றால், நாய்க்கும் பூனைக்கும் கூட சுத்தமாக ஆகாது.
மேலும் படிக்க | மகிழ்ச்சியாக கால்பந்து விளையாடும் கன்னியாஸ்திரிகள்! வைரல் வீடியோ!
ஏதாவதொரு விதிவிலக்குகள் இருந்தால் ஒழிய, பெரும்பாலான வீடுகளில் வளரும் பூனைகளுக்கும் நாய்க்கும் ஏழாம் பொருத்தம் தான். இதனால், பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும். குட்டிகள் இருந்தால் அதனோடு விளையாடும். எதிர்வீட்டு பூனையாக இருந்தால் கூட, பூனைக்கு பிடிக்காது. இப்படி எங்கு பார்த்தாலும் எதிரிகள் சூழ் உலகாக இருக்கும் பூனைக்கு நண்பனாக குரங்கு குட்டி ஒன்று கிடைத்திருப்பது இயற்கையின் ஆச்சரியம்.
Stop scrolling..
Timeline cleanser.. pic.twitter.com/CzcDQPeqZ5
— Buitengebieden (@buitengebieden_) February 20, 2022
ஒரே இடத்தில் வாழும் அவையிரண்டும் தோள் மீது தோள் கை போட்டுக்கொண்டு ஜாலியாக ஊர் சுற்றுகின்றன. கை என எதைக் குறிப்பிடுகிறீர்கள் என நீங்கள் கேட்கலாம். குரங்கின் முன்னங்காலின் ஒன்றை பூனை மீது போட்டுக் கொள்கிறது. அப்படியே, இரண்டும் இயற்கை வெளியில் உலா வருகின்றன. இந்த அற்புதமான காட்சியை ஒருவர் அழகாக படம்பிடித்து இணையத்திலும் பதிவேற்றியிருக்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் குரங்கும் பூனையும் தோழர்களா? என ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். கியூட்டாக இருக்கும் இந்த வீடியோ நெட்டிசன்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | மாப்பிள்ளை அழைப்பில் சாப்பாடு தாமதமானதால் திருமணத்தை நிறுத்திய மணமகன்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR