மாப்பிள்ளை அழைப்பில் சாப்பாடு தாமதமானதால் திருமணத்தை நிறுத்திய மணமகன்!

திருமணம் விழா என்பது லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து நடத்தப்படுகின்றன என்பதோடு, இதற்காக பல நாட்களாக திட்டம் தீட்டப்பட்டு, அதற்கு கடுமையாக உழைத்து, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2022, 05:01 PM IST
மாப்பிள்ளை அழைப்பில் சாப்பாடு தாமதமானதால் திருமணத்தை நிறுத்திய மணமகன்! title=

திருமணம் விழா என்பது லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து நடத்தப்படுகின்றன என்பதோடு, இதற்காக பல நாட்களாக திட்டம் தீட்டப்பட்டு, அதற்கு கடுமையாக உழைத்து, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், சில சமயம் ஏதேனும் ஒரு காரணத்திற்காக கலயாணம் நின்று போனால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பொருள் இழப்பு ஏற்படுவதோடு, மிகுந்த மன வேதனைக்கும் உள்ளாகின்றனர். மணமேடைக்கு வந்து நின்று போன திருமணம், பல இடங்களில் நடந்துள்ளது. 

அந்த வகையில், சமீபத்தில் கூட பீகார் மாநிலம், புர்னியா மாவட்டத்தில் படுவானா என்னும் கிராமத்தில் ராஜ்குமார் என்ற இளைஞருக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருமணம் நடைபெறும் இடத்திற்கு, தங்களது குடும்பத்தினருடன் மாப்பிள்ளை ஊர்வலம் வந்த நிலையில், மணமகனின் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு விருந்து அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, மணமகன் ராஜ்குமாரும், அவரது குடுமபத்தினரும் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இதனால திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர்.

மேலும் படிக்க | மனித நேயம் மிக்க செயல்; காக்கைகளிடம் சிக்கித் தவித்த ஆந்தையை மீட்ட பள்ளி மாணவி!

இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைக்க, ஊர் மக்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், மணமகன் அங்கிருந்து கோபமாக சென்று விட்ட நிலையில் திருமணமும் நின்று போனது. 

மம்ணமகன் குடும்பத்தினரின் செயலால் பாதிக்கபட்ட மணப்பெணின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி, போலீசாரும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மணமகனின் வீட்டார் திருமணத்தை நிறுத்த, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, இரு தரப்பிற்கு இடையே நடந்த பஞ்சாயத்தில், வரதட்சணையாக தரப்பட்ட 25,000 ரூபாய் திருமண விருந்து சமைப்பதற்காக செலவான பணம், பெண் வீட்டாரிடம் இருந்து வாங்கிய பைக் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், மணமகனின் குடும்பத்தினர், திருப்பி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இந்தியாவின் வினோத ரயில் நிலையம்: மத்திய பிரதேசத்தில் ‘பாதி’; ராஜஸ்தானில் ‘பாதி’...!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News