கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா: கில்லி பட ஸ்டைலில் ஒரு வைரல் வீடியோ

Funny Wedding Video: இந்தியாவில் திருமணங்கள் திருவிழாக்களை போல நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளில் பல்வேறு வகையான வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 3, 2022, 03:46 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா: கில்லி பட ஸ்டைலில் ஒரு வைரல் வீடியோ  title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்தியாவில் திருமணங்கள் திருவிழாக்களை போல நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளில் பல்வேறு வகையான வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. இவற்றின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன.

மேலும் படிக்க | பந்தா காட்டி பல்வு வாங்கிய பாப்பா: வீடியோ பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது 

இவற்றை பார்ப்பதில் இணையதளவாசிகளும் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். இப்போது, ​​இதே போன்ற திருமண வீடியோ ஒன்று சமூக ஊடக தளங்களில் பிரபலமாக உள்ளது. இந்த வீடியோவில், திருமண உடையில் மணமகனும் மணமகளும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டுள்ளதை காண முடிகின்றது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் rkkhan6549 என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. 

விஜய் நடித்த கில்லி படத்தில் வரும், ‘கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா’ பாடலில் வருவதை போல, கல்யாணம் ஆனவுடனேயே இந்த மணமக்கள் ஓடுவதைப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. இவர்களுக்கு இடையில், ஓட்டப்பந்தையம் நடக்கிறதா, இவர்களை யாராவது துறத்துகிறார்களா என பல ஊகங்கள் எழுகின்றன. 

கண் மண் தெரியாமல் ஓடும் மணமக்களின் அந்த வீடியோ இதோ:

தேதி குறிப்பிடப்படாத இந்த வீடியோ-வில், புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமண ஆடைகளில் கிராமப்புறச் சாலையைப் போல தோற்றமளிக்கும் ஒரு சாலையின் நடுவில் ஓடுவதைக் காண முடிகின்றது. மேலும் சிலர் மணமக்களுடன் சேர்ந்து ஓடுவதையும் காண முடிகின்றது. வீடியோவைப் பார்க்கும்போது, ​​மணமகனும், மணமகளும் ஒரு வாகனத்தை பின்தொடர்வதைப் போல தோன்றுகிறது. மணமக்களையே விட்டுவிட்டு வாகனம் அப்படி யாரை ஏற்றிக்கொண்டு போகிறது என இணையவாசிகள் வேடிக்கையாக கேள்வி கேட்கிறார்கள். 

வைரலான இந்த வீடியோவுக்கு இதுவரை 12.4 மில்லியன் வியூஸ்களும் ஆயிரக்கணக்கான லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | காக்டூ கிளி இசைத்த சோக கீதம்; கண் கலங்க வைக்கும் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News