கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர். அவர் தொடர்பான உள்ளடக்கம் ஆன்லைனில் பரபரப்பை ஏற்படுத்தத் தவறியதில்லை...
இந்நிலையில் தற்போது ட்ரூடோவின் சமீபத்திய படம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படத்தில், அவர் salt-and-pepper தாடியுடன் காணப்படுகிறார், மேலும் அவரது புதிய தோற்றம் மக்களிடையேயும் ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது.
படத்தில், 48 வயதான பிரதமர் ஒரு ஆழமான சிந்தனையில் இருப்பதை நாம் காணலாம். இந்த புகைப்படத்தினை திங்களன்று கனேடிய பிரதமரின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞர் ஆடம் ஸ்கொட்டி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ட்ரூடோவின் புதிய தோற்றம் பிரதமரால் ட்விட்டரில் பகிரப்பட்ட புகைப்படத்திலும் காணப்படுகிறது.
This morning, @HarjitSajjan and I met with @CDS_Canada_CEMD & @DMDND_SMMDN to discuss the latest developments in Iraq. The safety & well-being of Canadians in the region is our top priority, and we’ll keep monitoring the situation closely and encouraging de-escalation. pic.twitter.com/C3PUpUMFvR
— Justin Trudeau (@JustinTrudeau) January 6, 2020
படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பின்னர் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சில பயனர்கள் அவரது புதிய தாடியை நேசித்தாலும், மற்றவர்கள் அதன் பின்னால் ஒரு ஆழமான பொருளைக் கண்டுள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பதிவிடுகையில்., “தாடியை நேசியுங்கள். நீங்கள் குடும்பத்துடன் ஒரு சிறந்த விடுமுறையை கழித்தீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அதற்கு தகுதியானவர்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர் குறிப்பிடுகையில்., "இது அதிர்ச்சியானது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்று கருத்து தெரிவித்துள்ளார்.
டொராண்டோவைச் சேர்ந்த ஆண்களுக்கான பட ஆலோசகரான லியா மோரிகன் குளோபல் நியூஸிடம், தாடி ட்ரூடோவுக்கு “முதிர்ச்சி மற்றும் அனுபவத்தின் காற்று” தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்ரூடோவின் தாடி அவரது தந்தையைப் போல தோற்றமளிப்பதாக கனேடிய செய்தி போர்டல் சிபிசி தெரிவித்துள்ளது. ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை மறைந்த பியர் ட்ரூடோ கனடாவின் 15-வது பிரதமராகவும், 1968 மற்றும் 1984-க்கு இடையில் லிபரல் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
ஜஸ்டின் ட்ரூடோ முதன்முதலில் 2015-இல் கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் 2019 அக்டோபரில் கனடாவின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ட்ரூடோவின் லிபரல் கட்சி கனடா நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ்களுடன் ஒரு வலுவான போட்டிக்கு பின்னர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.