பங்கு..பங்கு.. நம்மளுக்கு கொஞ்சம்.. ஜூஸை பறித்து குடிக்கும் பூனையின் வைரல் வீடியோ!

பூனை ஒன்று அதன் உரிமையாளர் குடித்துக்கொண்டிருக்கும் ஜூஸை பிடுங்கி வேகமாக குடிக்கும் காட்சி இணையத்தில் பலரின் கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 8, 2022, 08:26 AM IST
  • குழந்தை போல ஓனர் மடியில் படுத்து இருக்கும் பூனை.
  • ஓனர் குடிக்கும் ஜூசை பிடிங்கி குடிக்கிறது.
  • இணையத்தில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பங்கு..பங்கு.. நம்மளுக்கு கொஞ்சம்.. ஜூஸை பறித்து குடிக்கும் பூனையின் வைரல் வீடியோ! title=

பூனைகளும் சரி, நாய்களும் சரி அதன் உரிமையாளர்களுடன் ஒரு குழந்தையை போலவோ அல்லது நண்பனை போலவோ தான் நடந்து கொள்ளும், சில சமயம் வளர்ப்பு பிராணிகள் அதன் உரிமையாளர்களுடன் விளையாடுவதை பார்க்கையில் நமக்கே கொஞ்சம் பொறாமையாக இருக்கும்.  தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பூனையும் அதன் உரிமையாளரும் எவ்வளவு பாசப்பிணைப்பில் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.  அதில் உரிமையாளரின் ஜூஸை பிடுங்கி பூனை குடிக்கும் காட்சி பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும், அவர்களுக்கு இடையிலுள்ள ஒரு உன்னதமான பந்தத்தை காட்டும் விதமாகவும் அமைந்துள்ளது.

மேலும் படிக்க | நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்: குரங்கின் வேற லெவல் மாஸ் ரியாக்‌ஷன், வைரல் வீடியோ

இந்த அழகான வீடியோவானது ட்விட்டரில் Animales y bichitos என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் ஒரு சோஃபா மீது ஒரு பெண்மணி அமர்ந்திருப்பதையும் அவரது மடியில் பிறந்த குழந்தையை போன்று பூனைக்குட்டியை துணியை சுற்றி பக்குவமாய் வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.  அந்த பெண் கையில் ஒரு ஜூஸ் பாட்டிலை வைத்துக்கொண்டு அந்த ஜூஸை குடிக்கிறார், ஜூஸை வாயில் ஊற்றிவிட்டு கீழே கொண்டு வரும்போது உடனே அந்த பூனை அந்த பாட்டிலை வேகமாக பிடுங்கி அதிலுள்ள ஜூஸை குடிக்கிறது.  பூனையின் செயலை பார்த்த அந்த பெண் சிரிக்கிறார், பின்னர் மீண்டும் அவர் அந்த ஜூஸை குடிக்க முயல்கிறார், மீண்டும் அந்த பூனை அதனை வேகமாக பிடுங்கி குடிக்கிறது. 

 

இந்த காட்சி பார்ப்பதற்கு ரசிக்கும்படியாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது, பூனையுடன் இருக்கும் அந்த பெண்ணும் பூனையின் செயலை கண்டு சிரித்து கொண்டிருக்கிறார்.  இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர், மேலும் இந்த வீடியோவிற்கு பல லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.

மேலும் படிக்க | Viral Video: ‘எங்களுக்கும் தெரியும்... நாங்களும் வாசிப்போம்ல’; டிரம்ஸ் வாசிக்கும் யானை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News