காவிரி விவகாரம் குறித்து நடிகர் விவேக் டிவிட்

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல முறை நீதிமன்றத்தை நாடியது. கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

Last Updated : Apr 7, 2018, 11:42 AM IST
காவிரி விவகாரம் குறித்து நடிகர் விவேக் டிவிட்

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல முறை நீதிமன்றத்தை நாடியது. கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என ஆணையிட்டது.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக இந்த மாதம் முதல் நாளில் இருந்து தமிழகத்தில் பல்வேறு தரப்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது காவிரி விவகாரம் குறித்து நகைச்சவை நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில்,

நாங்கள் கேட்பது நீரப்பா!
நீங்கள் தருவதோ சூரப்பா!
அண்ணன் தம்பிகள் நாமப்பா!
நம்மைப் பிரிப்பது நீராப்பா?
அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!
அன்னைக் காவிரி வேணும்ப்பா.       

என்று பதிவிட்டுள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர் - நடிகைகள் நாளை சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே 4 மணி நேரம் அறவழி போராட்டம் நடத்த உள்ளனர்.

More Stories

Trending News