‘பாக்கெட் பத்தாது... அண்டால பால் கொண்டு வா’ -சிம்புவின் ஆவேச வீடியோ!

‘பால் எல்லாம் பாக்கெட்டில் பத்தாது, அண்டாவில் கொண்டு வந்து வேற லெவல்ல செய்றீங்க’ என சிம்பு வெளியிட்ட ஆவேச வீடியோ! 

Last Updated : Jan 22, 2019, 12:26 PM IST
‘பாக்கெட் பத்தாது... அண்டால பால் கொண்டு வா’ -சிம்புவின்  ஆவேச வீடியோ!  title=

‘பால் எல்லாம் பாக்கெட்டில் பத்தாது, அண்டாவில் கொண்டு வந்து வேற லெவல்ல செய்றீங்க’ என சிம்பு வெளியிட்ட ஆவேச வீடியோ! 

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.  இப்படத்தில் இயக்குநர் சுந்தர்.சி உடன் சிம்பு இணைந்துள்ளார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்க மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. 

இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது படம் வெளியாகும் நாளில் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில், இன்றும் நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அதில் “நான் சமீபத்தில் எனக்கு கட் அவுட் பாலபிஷேகம் எல்லாம் வேண்டாம் என்று ரசிகர்களிடம் கூறினேன். அதற்கு சிலர் எனக்கெல்லாம் அந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா? இவர் எதுக்கு இதெல்லாம் பேசுறாரு. அவருக்கு இருக்குற 4, 5 ரசிகருக்கு இது தேவையா? என்று பலர் பேசியுள்ளனர்.

ஒரு தப்பு பண்ணுனா திருத்திக்கனும். அதனால, அந்த 4,5 ரசிகர்களுக்கு நான் சொல்லும் அன்புக்கட்டளை என்னனா? இதுவரைக்கும் நீங்க வைக்காத அளவுக்கு பிளெக்ஸ், கட் அவுட் வைக்கிறீங்க.. பால் எல்லாம் பாக்கெட்டில் பத்தாது, அண்டாவில் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். வேற லெவலில் செய்றீங்க. இதுதான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.” என்று அந்த வீடியோவில் சிம்பு பேசியுள்ளார்.

 

Trending News