ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: கம்யூட்டேஷன் மீட்பு , கூடுதல் ஓய்வூதிய விதிகளில் மாற்றம், ஓய்வூதிய உயர்வு விரைவில்

Central Government Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கான கம்யூட்டேஷன் மீட்பு மற்றும் கூடுதல் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகள் அவ்வப்போது விவாதப் பொருளாகி வருகின்றன. கவுகாத்தி உயர் நீதிமன்றமும், தில்லி உயர் நீதிமன்றமும் வழங்கிய சமீபத்திய முடிவுகள் இந்த திசையில் புதிய நம்பிக்கையை எழுப்பியுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 28, 2024, 02:04 PM IST
  • மத்திய அரசு பணிகளிலில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரரா நீங்கள்?
  • உங்கள் வீட்டில் ஓய்வூதியதாரர்கள் யாரேனும் உள்ளார்களா?
  • அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்:  கம்யூட்டேஷன் மீட்பு , கூடுதல் ஓய்வூதிய விதிகளில் மாற்றம், ஓய்வூதிய உயர்வு விரைவில் title=

Central Government Pensioners: மத்திய அரசு பணிகளிலில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் ஓய்வூதியதாரர்கள் யாரேனும் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

ஓய்வூதியதாரர்களுக்கான கம்யூட்டேஷன் மீட்பு மற்றும் கூடுதல் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகள் அவ்வப்போது விவாதப் பொருளாகி வருகின்றன. கவுகாத்தி உயர் நீதிமன்றமும், தில்லி உயர் நீதிமன்றமும் வழங்கிய சமீபத்திய முடிவுகள் இந்த திசையில் புதிய நம்பிக்கையை எழுப்பியுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த நீதிமன்ற முடிவுகளின் பின்னணியில் ஓய்வூதியதாரர்களின் உரிமைகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்தும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Additional Pension For Pensioners: 80 வயதில் கூடுதல் ஓய்வூதியத்தியம் வழங்கப்படுதல்

ஓய்வூதியம் பெறுவோர் 80, 85, 90, 95 அல்லது 100 வயதை எட்டும்போது, ​​அடிப்படை ஓய்வூதியத்தில் முறையே 20%, 30%, 40%, 50% மற்றும் 100% கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த வசதி பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் சிவில் அரசு ஊழியர்களுக்கு சமமாக பொருந்தும். எனினும், இந்த வயது வரம்பு குறித்தும் விவாதம் நடந்து வருகின்றது. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, 65 வயதிலிருந்து ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் 5% ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும், இது குறித்து இன்னும் தெளிவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

Pensioners: கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஓய்வூதியதாரர்களுக்கு 79 வயதில் கூடுதல் ஓய்வூதியம் வழங்க கவுகாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஏற்கனவே உள்ள கொள்கைக்கு எதிரானது என்று கூறிய அரசாங்கம் அதை செயல்படுத்தவில்லை. சமீபத்தில், பாதுகாப்பு அமைச்சகம் இந்த பிரச்சினை குறித்து தெளிவுபடுத்துமாறு DOPPW இடம் கூறியது. எடுக்கப்பட்ட முடிவு நீதித்துறை வரை மட்டுமே உள்ளது என்று கூறியது. அதாவது, நீதிமன்றம் சென்று வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே அதன் பலன் அளிக்கப்படுகிறது, சாதாரண ஓய்வூதியதாரர்களுக்கு இந்த பலன் கிடைப்பதில்லை என்று கூறப்படுகின்றது.

Pension Hike: ஓய்வூதிய உயர்வு

தற்போதைய விதியின்படி, 80 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் 20% உயர்த்தப்படுகிறது. இது சரியான அளவு அல்ல. 65 வயது முதல் 75 வயது வரை அதிக பணம் தேவைப்படுகிறது. ஆனால் அதை விடுத்து 80 வயதிற்குப் பிறகு ஓய்வூதியத்தை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை வயதுக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் என்று 2023ல் நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின்படி, 65 வயதில் 5%, 70 வயதில் 10%, 75 வயதில் 15%, 80 வயதில் 20% என்ற வகையில் ஓய்வூதியத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இந்த பரிந்துரை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

Commutation Recovery: கம்யுடேஷன் மீட்பு காலத்தில் மாற்றம் தேவை

தற்போதுள்ள விதியின்படி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியதாரர்களின் கம்யூடட் ஓய்வூதியத் தொகையை எடுக்க முடிகிறது. 1986 இல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த விதி அமலில் உள்ளது.

நீதிமன்ற உத்தரவுகள்

சமீபத்தில், தில்லி உயர் நீதிமன்றமும் மற்றும் ஆயுதப்படை தீர்ப்பாயமும் (AFT) 12 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யுடேஷன் ரிகவரியை நிறுத்த உத்தரவிட்டது. தேவையற்ற நிதிச்சுமையிலிருந்து ஓய்வூதியதாரர்களைப் பாதுகாக்க இந்த முடிவு முக்கியமானது.

அரசின் பதில் என்ன?

இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்க பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoP&PW) கருத்துகளுக்காக காத்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ELI Scheme: EPFO அடுத்த ஆண்டு கொண்டுவரும் மெகா திட்டம், பயன்பெற இதை கண்டிப்பாக செய்து விடுங்கள்

ஓய்வூதியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள்

12 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூட்டேஷன் மீட்பு முறையை ரத்து செய்யும் உத்தரவை அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ஒரே சீராகப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு நிதி நிவாரணம் கிடைக்கும்.

கொள்கையில் மாற்றம் தேவை

கூடுதல் ஓய்வூதியத்தின் வயது வரம்பில் நெகிழ்வுத்தன்மையை கொண்டு வர வேண்டிய அவசியமும் கம்யூடேஷன் ரிகவரி செயல்முறையை எளிதாக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இதற்காக ஓய்வூதியம் பெறுவோர் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதற்குப் பதிலாக, இந்தப் பிரச்சினைகளை அரசாங்கம் தனது சொந்த மட்டத்தில் தீர்க்க வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் விடும்புகிறார்கள்.

ஓய்வூதியம் பெறுபவர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது அரசு மற்றும் நீதித்துறை ஆகிய இரண்டிற்கும் முன்னுரிமையாக இருக்க வேண்டும். கவுகாத்தி உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் இந்த திசையில் சாதகமான படிகளாக பார்க்கப்படுகின்றன. இந்த முடிவுகளை பரவலாக செயல்படுத்தவும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யவும் அரசு விரைந்து செயல்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் விரும்புகிறார்கள்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு: ஊதியக்குழுவுக்கு பதிலாக புதிய முறை, அதிக நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News