பிரச்சனை எப்படி வருதுன்னே சிலருக்கு தெரியாது. எந்த சந்துல போனாலும் அவங்களை தேடி வருவதைப் போலவே சிக்கல்கள் வரும். எங்க போனாலும் என்னை தேடி மட்டும் எப்படி இந்த பிரச்சனை வருது என அவங்களே அடிக்கடி புலம்பும் அளவுக்கு இருக்கும் அந்தப் பிரச்சனைகள். வடிவேலு கூட ஒரு படத்தின் காமெடியில், ’எனக்கு மட்டும் ஏ இப்படி நடக்குது கடவுளே... என்னை மட்டும் சோதிக்காதீங்கடா’ என புலம்பித் தள்ளுவார். அந்தளவுக்கு பிரச்சனைகள் அவரை தேடி தேடி வரும். அப்படி தான் இந்த வீடியோவில் ஒருவர் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று நடந்து செல்கிறார். திடீரென வந்த அந்த இடிபோன்ற தாக்குதலை துளியும் எதிர்பார்க்கவில்லை. ’நான் பாட்டு சிவனேன்னு தான்ட போய்கிட்டு, இருந்தேன், யாரு வம்பு தும்புக்கும் போறதுல்ல, இருந்தாலும் என்னை மட்டும் அடிக்கனும்னு உனக்கு எப்படி கடவுளே தோனுச்சு’ அப்படிங்கிறது தான் அவருடைய அப்போதைய மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும். அப்படி என்ன நடந்தது என கேட்கிறீர்களா?.
மேலும் படிக்க | ஆத்தாடி... பெரிய்ய்ய்ய மீனை அநாயாசமாக கபளீகரம் செய்யும் நீர் பறவை!
இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோ ஒரு கடைவீதியில் எடுக்கப்பட்டதுபோல் தெரிகிறது. மக்கள் எல்லோரும் கடைகளுக்கு முன்பாக நின்றுகொண்டிருக்கிறார்கள். ஒருவர் மட்டும் வேகவேகமாக நடந்து செல்கிறார். அப்போது அந்த சாலையின் ஓரத்தில் மாடு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அந்த மாடு முட்டும் என அவருக்கு தெரியாது போலும். அவர் நடந்து செல்லும்போது, மாட்டுக்கு அருகாமையில் செல்கிறார். அப்போது ஏதோ ஞாபகத்தில் அவர் நடத்து செல்ல, திடீரென அந்த மாடு அவரை முட்டு தூக்கி வீசுகிறது. இதில் நிலைகுலைந்த அவர் சில அடி தூரம் பறந்து சென்று விழுகிறார். அவருக்கு பதட்டம், சுற்றி இருந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. ஆனால் என்ன செய்ய முடியும்?. கட்டியிருந்த மாடு அவரை முட்டிவிட்டது.
ஏன் முட்டியது? எதற்காக முட்டியது? என்று அதனிடம் போய் வினா எழுப்பவா முடியும். எதற்காக இப்படியொரு சம்பவம் நடந்தது என்றே அவருக்கு தெரியவில்லை. ஆனால் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது என்பது தான் அப்போது அவருடைய கேள்வியாக இருந்திருக்க முடியும். இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும், இதன் பின்னணியில் மாட்டுஉரிமையாளரின் பொறுப்பற்ற தன்மையும் வெளிப்படையாக தெரிகிறது. மக்கள் அதிகம் நடமாடும் சாலையில் கொண்டு வந்து மாட்டை கட்டி வைத்திருக்கிறார். அதனால் ஒருவர் பாதிக்கப்பட்டும் இருக்கிறார். இது அவருக்கு எவ்வளவு பெரிய வலியைக் கொடுத்திருக்கும் என்பதை மாட்டு உரிமையாளருக்கு தெரியுமா? என்று கூட தெரியவில்லை. மாட்டிடம் முட்டு வாங்கியவர் அமைதியாக எழுந்து நடந்தும் சென்றுவிட்டார். இப்படி பொறுப்பில்லாமல் இருக்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் அவசியம். ஏனென்றால் மாடு தூக்கிய வீசியவருக்கு ஏதேனும் உடல் நல பிரச்சனைகள் வந்தால் யார் பொறுப்பேற்பது?.
மாடு முட்டி தூக்கி வீசும் வைரல் வீடியோ:
மேலும் படிக்க | வயசானாலும் இளமை துள்ளுது! ரவுண்டு கட்டி டான்ஸ் ஆடும் வேட்டிக்கார மாமூ வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ