என் வழில வந்தா செஞ்சு விட்டுடுவேன்! கழுகை கார்னர் செய்து மூலையில் முடக்கும் வீரச் சேவல் வீடியோ வைரல்...

Viral Video Of Cock Cornering Eagle : வலிமையிலும் உருவத்திலும் பலத்திலும் பெரிய பறவையை தாக்கும் சேவல் கெத்தா? இல்லை தாக்குதலால் பயப்பட்டு, ஓரத்தில் ஓரமாய் ஒதுங்கி நின்று பரிதாபப் பார்வை பார்க்கும் கழுகின் பரிதாபம் பாவமா? வைரல் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 16, 2024, 12:36 PM IST
  • சேவலுக்கு வீரம் வந்தால்?
  • கழுகை கார்னர் செய்த சேவல்
  • வேற லெவல் வீடியோ!
என் வழில வந்தா செஞ்சு விட்டுடுவேன்! கழுகை கார்னர் செய்து மூலையில் முடக்கும் வீரச் சேவல் வீடியோ வைரல்... title=

Viral Video Of Eagle : காட்டுக்கு அரசன் என்றால் அது வலிமையானதாக இருந்தால் தான் சாத்தியம். சிங்கம், புலி போன்ற விலங்குகளின் பெயரைக்கேட்டாலே பிற விலங்குகள் நடுங்கிப் பதுங்கும். அதேபோல தான், பறவைகளில் கழுகு வலிமை வாய்ந்தது. அதைக் கண்டால் பிற பறவை இனங்கள் பயப்படும். கழுகுப் பார்வையில் இருந்து தப்பிப்பதே பெரிய பிரம்ம பிரயர்த்தனமாக இருக்கும். 

ஆனால், தனது வலிமையின் காரணமாக கர்வத்துடன் இருக்கும் கழுகை கார்னர் செய்த சேவல் ஆச்சரியப்படுத்துகிறது. தில் இருந்தால், முயற்சி செய்தால் அடங்காப்பிடாரிகளையும் அடக்க முடியும் என்று காட்டுகிறதா இந்த வீடியோ என பலரும் ஆச்சரியப்படுகின்றனர். உண்மையிலே இந்த வீடியோவைப் பார்த்தால் வியப்பு ஏற்படுகிறது என்று சொன்னால் அது தவறில்லை. சரி உங்களுக்கு இந்த வீடியோவைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?

இந்த வித்தியாசமான வைரல் வீடியோ எக்ஸ் வலைதளத்தில், Wildlife Uncensored (@TheeDarkCircle)  என்ற கணக்கில் இருந்து பகிரப்பட்டு, பலரால் பார்க்கப்பட்டு வைரலாகிறது. அபூர்வமாய் காணக்கூடிய விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பதிவேற்றப்பட்டு வைரலாகின்றன.

தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகும் இந்த வீடியோவில், அச்சமில்லாமல், தன்னை தற்காத்துக் கொள்வதற்காக சீறி சண்டையிடும் சேவல் ஆச்சரியம் அளிக்கிறது. உருவத்திலும் வலிமையிலும் பெரியதாக இருந்தாலும், அதனை நினைத்து பயப்படாமல், போட்டுத் தாக்கும் சேவல் பல பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.  

மேலும் படிக்க | மூச்சுவிடும் பூமி... இணையத்தில் வைரலாகும் அதிசய வீடியோ: மிஸ் பண்ணாம பாருங்க

இந்த வீடியோ வைரலாவதற்கு காரணம் தன்னை விட வலிமையிலும் உருவத்திலும் பலத்திலும் பெரிய பறவையை தாக்கும் சேவல் மட்டுமல்ல, அஞ்சி ஓரத்தில் ஓரமாய் போய் ஒதுங்கி நின்று பரிதாபப் பார்வை பார்க்கும் கழுகின் அதைரியமும் தான். எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் பயப்பட்டால் சோலி முடிஞ்சுது என்ற விஷயத்தை கழுகைப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளலாம்.

என் வழில வந்தா செஞ்சு விட்டுடுவேன் என்று சொல்வது போல, கழுகை கார்னர் செய்த சேவல் வீடியோ வைரல் ஆகிறது. இதுபோன்ற பல வீடியோக்களை பார்த்து ரசிப்பதுடன், அதிலிருந்து பாடத்தையும் கற்றுக் கொள்ளலாம்.  

இதுபோல், பல நிதர்சனமான உண்மைகளை உரக்கச் சொல்லும் வீடியோக்கள் வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகின்றன. அதிலும் திகிலூட்டும் காட்சிகளும் கூடிய வீடியோக்களை பலரும் பார்த்து பகிர்ந்து பலரையும் பார்க்கச் செய்கின்றனர்.

மேலும் படிக்க | காட்டுக்கு ராஜான்னாலும் கட்டுப்பாடு இருக்குல்ல! யானையின் குரலுக்குக் கட்டுப்படும் ராஜா குடும்பம் வீடியோ வைரல்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News