திலீப் - காவ்யா மாதவன் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது!

மலையாள நடிகர் திலீப் - காவ்யா மாதவன் தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது!

Written by - ZEE Bureau | Last Updated : Oct 19, 2018, 01:23 PM IST
திலீப் - காவ்யா மாதவன் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது!

மலையாள நடிகர் திலீப் - காவ்யா மாதவன் தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது!

மலையாள நடிகை மஞ்சு வாரியருடன் ஏற்பட்ட விவாகரத்திற்குப் பின்னர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகை காவ்யா மாதவனை கரம் பிடித்தார் நடிகர் திலீப். இந்நிலையில் தற்போது இத்தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

காவ்யா மாதவன் 2010-ஆம் ஆண்டு தொழில் அதிபர் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களிலேயே அவரை பிரிந்து வாழ துவங்கினார்.

அதேப்போல் திலீப் - மஞ்சுவாரியர் தம்பதியருக்கு 1998-ஆம் ஆண்டு திருமணமாகி மீனாட்சி என்ற குழந்தை பிறந்தது. தற்போது திலீப் - காவ்யாவுடன் தான் மீனாட்சி வசித்து வருகிறார். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2015-ஆம் ஆண்டு இத்தம்பதியர் விவாகரத்து பெற்றனர். 

இவர்களின் விவாகரத்திற்கு பின்னர் திலீப் - காவ்யா மாதவன் இருவரும் திருமணம் செய்து மகிழ்சியான வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

More Stories

Trending News