Watch: நீச்சல்குளத்தில் முழ்கிய பெண்ணை பாய்ந்து சென்று காப்பாற்றிய நாய்!!

நீச்சல்குளத்தில் முழ்கியது போல் நடிக்கும் பெண்ணை பாய்ந்து சென்று மீட்கும் நாயின் வீடியோ வைரளாகி வருகிறது!!

Last Updated : Aug 22, 2019, 04:14 PM IST
Watch: நீச்சல்குளத்தில் முழ்கிய பெண்ணை பாய்ந்து சென்று காப்பாற்றிய நாய்!! title=

நீச்சல்குளத்தில் முழ்கியது போல் நடிக்கும் பெண்ணை பாய்ந்து சென்று மீட்கும் நாயின் வீடியோ வைரளாகி வருகிறது!!

நம்மில் சிலருக்கு செல்ல பிராணிகள் மீது அதீத அக்கறையும் பாசமும் உண்டு. நான் அவற்றை வளர்க்கும் போது அழகாகவும், புத்திசாலியாகவும் மாற்றுவதற்காக சில பயிற்சிகளை அவற்றிற்கு நாம் கற்றுக்கொடுப்பது உண்டு. அது விளையாட்டாக இருக்கட்டும் உணவு உண்ணும் முறையாக இருக்கட்டு நாம் சொல்வதை அப்படியே கடைபிக்க நாம் கற்றுக்கொடுத்து வளர்ப்போம். 

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் முதல் தேர்வாக நாயாக தான் இருக்கும். பலர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அன்பாக இருப்பதை விட வீட்டில் அவர்கள் வளர்க்கும் நாயுடன் மிகவும் அன்பாக இருப்பார்கள். பெரும் பாலும் மக்களில் அதிகம் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதாக பல ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் நம் வீட்டில் செல்லப்பிராணிகள் செய்யும் குறும்புத்தனத்தை நாம் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவளைதலத்தில் பதிவிட்டும் வருவதும் வழக்கம். இதுப்போன்ற வீடியோவை இளம்பெண் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நீச்சல்குளத்தில் முழ்கி தத்தளிப்பது போல் நடிக்கும் இளம்பெண்ணை அவர் வளர்க்கும் நாய் பாய்ந்து சென்று காப்பாற்றி மேலே கொண்டு செல்கிறது. 1 மில்லியனுக்கு அதிகமானோர் பார்த்து ரசித்த இந்த வீடியோவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் ரசித்து  ரீட்வீட் செய்துள்ளார்.

 

 

Trending News