பார்க்கில் உற்சாகமாக சறுக்கு மரம் விளையாடும் நாய்க்குட்டிகள்!

நாய்க்குட்டிகள் சில குழந்தைகள் சறுக்கு மரத்தில் ஏறி விளையாடுவது போல விளையாடும் காட்சி இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.

Written by - RK Spark | Last Updated : Jun 10, 2022, 08:42 AM IST
  • பூங்காவில் ஜாலியாக விளையாடும் நாய்க்குட்டிகள்.
  • குழந்தைகளை போல மகிழ்ச்சியில் துல்லி ஆட்டம்.
  • இணையத்தில் வீடியோ வைரல்.
பார்க்கில் உற்சாகமாக சறுக்கு மரம் விளையாடும் நாய்க்குட்டிகள்! title=

நாய்க்குட்டிகள் சில குழந்தைகள் சறுக்கு மரத்தில் ஏறி விளையாடுவது போல விளையாடும் காட்சி இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.

இணையம்  பலவிதமான அற்புதங்களை கொண்டுள்ளது, அதில் நமக்கு வேண்டிய முக்கியமான தகவல்கள் தொடங்கி நம்மை மகிழ்விக்கும் வகையில் சிறந்த பொழுதுபோக்கான நிகழ்வுகள் வரை அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.  அந்த வகையில் இணையத்தில் பரவும் சில விலங்குகளின் வீடியோக்கள் பலரையும் எளிதில் கவர்ந்துவிடுகிறது.  விலங்குகளை அடைத்து வைக்காமல் சுதந்திரமாக வெளியே விடும்போது அவை எவ்வளவு மகிழ்ச்சியாக ஓடித்திருந்து விளையாடுகிறது என்பதை தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ காட்டுகிறது.

d

மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!

அழகான பல வீடியோக்களை கொண்டுள்ள ட்விட்டரில் 'எ பீஸ் ஆஃப் நேச்சர்' என்கிற கணக்கு பக்கத்தில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.  அந்த வீடியோவில், குழந்தைகள் விளையாடும் பூங்கா போன்ற ஒரு இடம் உள்ளது, அங்கு குழந்தைகள் சறுக்கி விளையாட பயன்படுத்தும் சறுக்கு மரம் ஒன்றும் உள்ளது.  அதன் மீது வெள்ளை மற்றும் செம்பழுப்பு நிறம் நிறைந்த மூன்று நாய்க்குட்டிகள் இருப்பதை காண முடிகிறது.  அந்த சறுக்களின் மீது ஏறி நாய்க்குட்டிகள் விளையாடிக்கொண்டு இருக்கின்றது, ஒவ்வொன்றும் மாறி மாறி சண்டைபோட்டுக்கொண்டே மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டு இருப்பதுடன் இந்த வீடியோ நிறைவடைகிறது.

 

சில நிமிடங்களே கால அளவு கொண்டுள்ள இந்த வீடியோவை இதுவரை எழுபத்தி மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளதோடு, பல கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News