பூனைகளின் சண்டையை தடுத்து நிறுத்திய நாய்...வைரல் வீடியோ!

இரண்டு பூனைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடும் நேரத்தில் நாய் ஒன்று குறுக்கே புகுந்து சண்டையை நிறுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 3, 2022, 06:25 PM IST
  • சண்டையிடும் பூனை குட்டிகள்.
  • தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தும் நாய்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
பூனைகளின் சண்டையை தடுத்து நிறுத்திய நாய்...வைரல் வீடியோ! title=

விலங்குகள் சில சமயம் ஒன்றுக்கொன்று பாசமாக இருந்தாலும் அவற்றிற்குள் சண்டை வந்தால் அந்த இடத்தையே அதகளப்படுத்தி விடும்.  ஆனால் சில வளர்ப்பு பிராணிகள் சண்டையிட்டு கொள்வது பார்ப்பதற்கு கொஞ்சம் ரசிக்கும்படியானதாக இருக்கும்.  இதுபோன்ற ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இரு வளர்ப்பு பிராணிகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக்கொள்ளும்ப்போது, அவற்றின் சண்டையை மற்றொரு வளர்ப்பு பிராணி வந்து நிறுத்துகிறது.  இந்த காட்சியை இணையத்தில் கண்ட பலரும் ரசித்து வருகின்றனர்.

 

மேலும் படிக்க | 'ப்பா...' என வாய் பிளக்க வைக்கும் டான்ஸ்: இணையத்தை கலக்கும் பெண்ணின் வைரல் வீடியோ

சமூக வலைத்தளமான ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரல் வீடியோவில், ஒரு அறையில் மூன்று பூனைக்குட்டிகள் உள்ளது, அதில் ஒரு பூனைக்குட்டி சுவற்றின் ஓரமாக அமைதியாக நின்றுகொண்டிருப்பதையும், மற்ற இரண்டு பூனைக்குட்டிகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவது போல நிற்பதையும் காண முடிகிறது.  குத்துசண்டை போல அந்த இரண்டு பூனைக்குட்டிகளும் ஒன்றுக்கொன்று கட்டிப்புரண்டு சண்டை போட்டு கொண்டிருக்கிறது.  தீடீரென நாய்க்குட்டி ஒன்று பாய்ந்து குறுக்கே வந்து பூனைக்குட்டிகளின் மீது விழுந்து சண்டையை நிறுத்துகிறது.  பின்னர் இரண்டு பூனைக்குட்டிகளும் ஒன்றுக்கொன்று பார்த்துக்கொள்கிறது, அதில் ஒரு பூனைக்குட்டி நாயை தொட முயற்சிக்கும்போது, அந்த நாய்க்குட்டி ஓடி விடுவதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

இணையத்தில் வெளியான இந்த வீடியோவை இதுவரை பதின்மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க | கர்ஜனையால் காட்டை உலுக்கும் சிங்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News