Trigger Warning : யானையை தூக்குல தொங்கவிட்ட கதை தெரியுமா?

இளகிய மனசு கொண்டவர்கள் இந்தக் கதையை படிக்காதீங்க. 4500 கிலோ எடை கொண்ட யானையை தூக்குல தொங்கவிட்ட கதை கூட இந்த உலகத்துல நடந்து இருக்கு  

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : May 30, 2022, 01:34 PM IST
  • யானையை தூக்கில் தொங்கவிட்ட மனிதர்கள்
  • வரலாற்றின் கொடூர சம்பவங்களுல் ஒன்று
  • மேரி என்ற யானையின் கதை என்றும் பேசப்படும்
Trigger Warning : யானையை தூக்குல தொங்கவிட்ட கதை தெரியுமா? title=

1916ஆம் வருஷம் அமெரிக்காவின் டென்னெஸ்ஸி மாகாணத்துல ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியில நடந்த மிக மனிதாபமானமில்லாத கதையைதான் இப்ப பார்க்க போறோம். அந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில எல்லா விஷயங்களையும் முன்னாடி நின்னு செய்யக்கூடிய 22 வயசு பெண் யானை பேரு மேரி. ரொம்பவே சுட்டியான மேரியை கண்டு ரசிக்காத ஆட்களே இருக்க முடியாது.

சர்க்கஸ் ஓனர் சார்லிதான் இவளோ நாளா மேரிய பார்த்துக்கிட்டு இருந்தாரு. அப்பறம் புதுசா ரெட் எல்ட்ரிஜ் அப்படிங்கற ஒருத்தரை யானை பாகனா நியமிச்சிருந்தாங்க சர்க்கஸ் குழு.  மேரி கிட்ட எப்பவுமே மென்மையாதான் நடந்துக்கனும்னு எல்ட்ரிட்ஜ்க்கு சொல்லப்பட்டிருந்தது. ஆனா அதையும் மீறி ஒருமுறை மேரிகிட்ட ஆக்ரோஷமா நடந்துக்கிட்டு இருந்திருக்காரு ரெட் எல்ட்ரிட்ஜ். மேரி யானை கீழ கிடக்குற தர்பூசணி பழத்தை எடுக்க முயற்சி செஞ்சபோது அதோட காதுக்கு பின்னாடி குச்சியை வெச்சு குத்தி இருக்காரு எல்ட்ரிட்ஜ்.

மேலும் படிக்க | என்னய்யா நடக்குதிங்க: மாலைக்கு பதில் பாம்பை மாற்றிக்கொண்ட மணமக்கள், வைரல் வீடியோ

இந்த சம்பவத்தால கடுப்பான மேரி, ரெட் எல்ட்ரிட்ஜை துதிக்கையால தூக்கி கீழ போட்டு தலையை மிதிச்சு கொன்னுடுச்சி. இந்த சம்பத்தை பார்த்த மக்கள் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடத் தொடங்கினாங்க. அங்க இருந்த ஒரு காவலர் துப்பாக்கியால மேரியை நாலு முறை சுட்டாரு. ஆனாலும் அந்த துப்பாக்கி குண்டுகளால மேரியோட கடினமான தோலை துளைக்க முடியலை. ஆனாலும் மேரிக்கு கடுமையான காயம் ஏற்பட்டுச்சி. இதைப் பார்த்த மக்கள் "Kill the elephant"னு கூச்சல் போடத் தொடங்கினாங்க. இந்த நிலைமையை சமாளிக்க யானையை பொது இடத்துல வெச்சு மக்கள் முன்னாடி கொல்றதுதான் சரியான யோசனையா சார்லிக்கு தோணுச்சி.

மேரியை கொல்றதுக்கு கரண்ட் ஷாக் வெக்குறது முதற்கொண்டு பல யோசனைகள் சொல்லப்பட்டுச்சி. ஆனா தூக்குல தொங்க விடுறதுதான் சரியான தீர்வா சார்லிக்கு தெரிஞ்சிருக்கு. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுச்சி. பக்கத்துல இருக்கற ஒரு ரயில் டிராக் கிட்ட ரயில்களை தூக்கும் கிரேன்ல மேரியை துக்குல போட முடிவு பண்ணாங்க.

மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

அந்த நாளும் வந்துச்சி. மக்கள் கூடி நின்னாங்க. தனக்கு ஏதோ நடக்கப் போகுதுனு தெரிஞ்சு கத்தி கூச்சலிட்ட மேரி தூக்கு மேடைக்கு கூட்டி வரப்பட்டுச்சி. அங்க அதோட கழுத்துல ஒரு சங்கிலி கட்டப்பட்டு கிரேன் கொஞ்சம் கொஞ்சமா உயர்த்தப்பட்டுச்சி. இந்த கொடூர சம்பவத்தை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்னு பார்த்தாங்க. யானையோட அலறல் சத்தம் விண்ணைத் தொட்டுச்சி. ஆனாலும் முயற்சி கைவிடப்படலை. எலும்புகள் உடையுற சத்தம் கேட்டதா பல செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டாங்க. 4500 கிலோ யானையை கட்டித் தொங்கவிட்டா வேற என்ன நடக்கும்!

 elephant mary

இவளோ கொடூரத்துக்கும் நடுவுல இன்னொரு துக்க சம்பவமும் நடந்துச்சி. மேரியை கட்டித் தூக்குன சங்கிலி அறுந்து யானை கீழ விழுந்துடுச்சி. அலறல் சத்தம் ஓயவே இல்ல. விழுந்ததுல மேரியோட இடுப்பு எலும்பு உடைஞ்சு போச்சு. இப்போ மேரி பரிதாபமா படுக்கவும் முடியாம நகரவும் முடியாம உட்கார்ந்து இருந்ததா பார்த்தவங்க சொல்லி இருக்காங்க. மீண்டும் சங்கிலிகள் கழுத்துல கட்டப்பட்டு மேரி தொங்க விடப்பட்டுச்சி.

மேலும் படிக்க | இது தந்தையின் தாலாட்டு - குட்டியை முதல்முதலாக பார்க்கும் ஒட்டகச்சிவிங்கி... வைரல் வீடியோ

இந்த முறை மேரி ரொம்ப போராடல. அமைதியா முடிவை ஏத்துக்கற நிலைக்கு போயிடுச்சி. சில நிமிஷங்கள்ல மேரியோட கால்கள் அசைவை நிறுத்துச்சி. மேரியின் உடல் கீழே இறக்கப்பட்டு மருத்துவர் மேரி இறந்துட்டதா சர்டிபிக்கேட் குடுத்தாரு. உலகளவுல நடந்த மிகக்கொடூரமான சம்பவங்கள்ல இதுவும் ஒன்னு. Murderous Mary கதையை வெச்சு பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கு.

இதையெல்லாம் படமா எடுத்தா கூட யாரும் நம்ப மாட்டாங்க. இப்படியெல்லாமா நடக்கும்னு கேள்வி கேட்பாங்க. ஆனா இதெல்லாம் உண்மையிலேயே மனிதர்கள் செஞ்ச விஷயங்கள். கலைஞர்கள் எப்பவுமே சொல்ற மாதிரி “கதைக்குதான் லாஜிக் எல்லாம் தேவை. நிஜ வாழ்க்கைக்கு ஒரு லாஜிக்கும் தேவையில்லை”. ‘மேரி’ மனிதகுலத்தின் இழிவின் அடையாளம்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News