மனிதனாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி பாசம் என்பது அனைத்து உயிர்களுக்கும் ஒன்றுதான். சில சமயங்களில் மனிதர்களைவிடவும் விலங்குகள் அவைகளுக்குள் காட்டிக்கொள்ளும் பாசம் சிலிர்ப்படைய செய்யும். அதுமட்டுமின்றி அந்தப் பாசத்தை பார்க்கும் மனிதர்களும் தங்களது விருப்பங்களை அதிகம் பகிர்வர்.
அந்தவகையில் தந்தை ஒட்டகச்சிவிங்கி ஒன்று தனது குட்டியை முதல்முதலாக பார்ப்பதும், தாய் ஒட்டகச்சிவிங்கிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவானது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்டா பார்பரா உயிரியல் பூங்காவில் வீடியோ எடுக்கப்பட்டது. இது முதலில் 2020இல் வெளியிடப்பட்டாலும் தற்போது மீண்டும் வைரலாகிவருகிறது.
Father giraffe came to visit his newborn son pic.twitter.com/byh5lzARvd
— Tansu (@TansuYegen) May 24, 2022
அந்த வீடியோவில், ஒரு தந்தை ஒட்டகச்சிவிங்கி அடைப்புக்குள் நுழைந்து, புதிதாகப் பிறந்த மகனைத் தேடுகிறது. ஒருவழியாக தனது குட்டியை பார்த்த பிறகு தாய் ஒட்டகச்சிவிங்கிக்கு காதலுடன் முத்தம் கொடுக்கிறது. தந்தை ஒட்டகச்சிவிங்கிக்கு மைக்கேல் என்றும் குட்டி ஒட்டகச்சிவிங்கிக்கு ட்விகா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ‘அப்பாடா, யாரும் பாக்கல’: பல்பு வாங்கிய சிங்கத்தின் மைண்டு வாய்ஸ், வைரல் வீடியோ
இந்த வீடியோவான்வது 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 49k விருப்பங்களையும் பெற்றுள்ளது. தந்தை-மகன் இருவரின் முதல் சந்திப்பு எவ்வளவு அழகாக இருக்கிறது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். மேலும், அதனை அதிகம் பகிர்ந்தும்வருகின்றனர்.
மேலும் படிக்க | பதுங்குக்குழியில் பதுங்கினாலும் பாய்ந்து வேட்டையாடும் சிறுத்தையின் பாதள வேட்டை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR