ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! நாளை ஃபஸ்ட் லுக்!

கிளாப்போர்ட் புரொடக்ஷன் நிறுவனத்தின் நிறுவனரும் - நடிகருமான வி சத்தியமூர்த்தி தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது.

Last Updated : Apr 30, 2018, 11:26 AM IST
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! நாளை ஃபஸ்ட் லுக்! title=

கிளாப்போர்ட் புரொடக்ஷன் நிறுவனத்தின் நிறுவனரும் - நடிகருமான வி சத்தியமூர்த்தி தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது.

இப்படத்தை, அறிமுக இயக்குநர் - 'எருமசாணி' புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி இருக்கிறார். 'மெட்ராஸ் சென்ட்ரல்' புகழ் கோபி - சுதாகர், 'எரும சாணி' புகழ் விஜய் - ஹரிஜா, 'புட் சட்னி' புகழ் அகஸ்டின், 'டெம்பில் மங்கிஸ்' புகழ் ஷா ரா - அப்துல் மற்றும் விஜே ஆஷிக் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஜோஷ்வா ஜே பெரேஸ், இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ், படத்தொகுப்பாளராக தோபிக் - கணேஷ் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் நாளை மே தினம் முன்னிட்டு வெளியாகயுள்ளது.

 

 

Trending News