சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் முதுகலை பட்டம் வழங்கும் பல்கலைக்கழகம்!

பிரான்சில் உள்ள ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் உண்பதற்கும், குடிப்பதற்கும், ரசித்து வாழ்வதற்கும் முதுகலை பட்டம் அளிக்கப்படுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2022, 04:35 PM IST
  • பிரான்சின் சயின்சஸ் போ லில்லில் (Sciences Po Lille) சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், நன்கு வாழ விரும்புவர்களுக்கும் ஒரு முதுகலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த படிப்பு gastro-diplomacy யை சார்ந்து காணப்படுகிறது, உணவு குறித்த தொழில்நுட்ப்பம், சமயலறையில் பாலின பாகுபாடு போன்றவை குறித்து விளக்குகிறது.
சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் முதுகலை பட்டம் வழங்கும் பல்கலைக்கழகம்! title=

பண்பாட்டை நினைவுகூறும் வகையில் பல பட்டபடிப்புகளை பல பல்கலைக்கழகங்கள் வைத்துள்ளது.  ஆனால் பிரான்சில் உள்ள ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் வித்தியாசமான  பட்டப்படிப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு, இந்த வகுப்பை புறக்கணிக்க எவரும் எண்ணமாட்டார்கள், அத்தகைய பட்டப்படிப்பை இந்த பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ALSO READ | கானல் நீர் போல கண்முன்னே மறையும் ஓடை! வைரலாகும் வீடியோ!

பிரான்சின் மிகவும் மதிப்புமிக்க அரசியல், அறிவியல் பள்ளிகளில் ஒன்றாக கருதப்படும் சயின்சஸ் போ லில்லில் (Sciences Po Lille) சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், நன்கு வாழ விரும்புவர்களுக்கும் ஒரு முதுகலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது கேட்பதற்கு நம்பக்கூடியதாக இல்லையென்றாலும், இது தான் உண்மை.  இந்த முதுகலை பட்டப்படிப்பு BMW என்று அழைக்கப்படுகிறது.  BMW என்பது 'போயர்(boire), மேங்கர்( manger), விவ்ரே(vivre)' என்பதன் சுருக்கமாகும்.  இதில் உணவு, பானங்கள் மற்றும் 'வாழ்க்கை' ஆகியவற்றை குறிக்கும் வகையில் பாடங்கள் அமைந்திருக்கும்.  இந்த படிப்பு gastro-diplomacy யை சார்ந்து காணப்படுகிறது, உணவு குறித்த தொழில்நுட்ப்பம், சமயலறையில் பாலின பாகுபாடு போன்றவை குறித்து விளக்குகிறது.

drinks

விரிவுரையாளர் Benôit Lengaigne தனித்துவமான சில பாடங்களை கற்பித்து வருகிறார், அதில் முக்கியமானது   'terrestrial foods'.  கட்டுரைகளை எழுதுவதை விட தாவர அடிப்படையில் மாறுபாடு செய்தல், விவசாயத்தின் வரலாறு மற்றும் இதர தலைப்புகளை கலந்துரையாடலின் மூலம் மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது.  மேலும் விரிவுரையாளர் Benôit Lengaigne கூறுகையில் இந்த புதிய படிப்பை பற்றி முதலில் மாணவர்களிடம் கூறியபோது அனைவரும் இதற்கு சிரித்தனர்.  ஆனால் இது மாணவர்களுக்கு எளிதில் ஒரு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமையும்.  இதுகுறித்து முழுமையாக யாருக்கும் தெரியாது, ஆனால் இது கவர்ச்சிகரமாக உள்ளது, இந்த பட்டப்படிப்பு அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைகிறது.  இந்த அவசர உலகத்தில், உணவு சவாலான ஒன்றாக இருக்கும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த படிப்பு அமையக்கூடும் என்று மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.

ALSO READ | ஜிம்முக்கு போன பிரதமர் மோடி - Viral Video

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News