கார் மேல் ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு ; வீடியோ வைரல்

Giant Snake Video: விலங்குகளின் வைரல் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ சிலரது மனதை நடுங்க வைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 26, 2022, 02:25 PM IST
  • இந்த வீடியோ சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
  • இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
  • கேமராவில் சிக்கிய ஆபத்தான மலைப்பாம்பு
கார் மேல் ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு ; வீடியோ வைரல் title=

சமூக ஊடகங்களில் வைரல்: விலங்குகளின் வைரல் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அதில் பெரும்பாலான வீடியோக்களில் பாம்புகள் காணப்படுகின்றன. இந்த உலகில் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் பாம்புகள் அடங்கும். பாம்பு என்றாலே பலர் அலறியடித்து ஓடுவார்கள். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பு என்றவுடனே பயமும் பதற்றமும் ஏற்படும். ஆனால் சிலர் பாம்புகளை கண்டு அஞ்சுவது இல்லை. சிலர் பொம்மைகளாக நினைத்து விளையாடத் தொடங்குகிறார்கள். அதேபோல் பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.

அப்படிப்பட்ட பாம்புகளை மிக அருகில் பார்க்க இந்த சமூக வலைத்தள சமூக ஊடக வீடியோக்கள் உதவுகின்றன. பாம்புகள் தொடர்பான பல வித வித்தியாசமான நிகழ்வுகளை நாம் இவற்றில் காண்கிறோம். பாம்பின் அளவு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவை மனிதனின் மனதில் கண்டிப்பாக அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ சிலரது மனதை  நடுங்க வைக்கும். ஏனெனில் இங்கு காட்டப்பட்டுள்ள காணொளி மலைப்பாம்பின் ஆகும். இவ்வளவு பெரிய மலைப்பாம்பை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இந்த காணொளியை பார்த்தவுடன் உங்களுக்கு நடுக்கம் வரும் என்பது மட்டும் உறுதி. 

மேலும் படிக்க: விளையாட்டு விபரீதமானது: நபரை பதம் பார்த்த பாம்பு: வீடியோ வைரல்

இந்த வீடியோ சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தக் காணொளியை உருவாக்கிய ஏ என்டேடா பூண்டாவின் துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும். எனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பாருங்கள். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

உண்மையில், ஒரு நபர் தனது கேமராவில் இந்த ஆபத்தான மலைப்பாம்பை படம் பிடித்துள்ளார். இந்த காணொளியில் பாம்பு ஒன்று ஜீப்பில் ஏறுவதை காணலாம். பாம்பின் நீளம் மற்றும் எடையைக் கூறுவதும் கடினம் தான். ஆனால் இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் வெகு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

வைரலான வீடியோ:
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. ஒரே நாளில் சில வினாடிகள் வீடியோவை ஆயிரக்கணக்கானோர் விரும்பியுள்ளனர். அத்துடன் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். மேலும் இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பாம்புக்கும் நாய்க்கும் செம சண்டை, ஜெயிச்சது யாரு? அங்தான் ஒரு ட்விஸ்ட்: வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News