அட இந்த பொண்ணுக்கு யாருப்பா டான்ஸ் மாஸ்டர் -Watch!

இணையத்தை கலக்கும் இளம்பெண்ணின் டிரெட்மில்லில் நடன வீடியோ!!

Last Updated : Jun 25, 2018, 07:24 PM IST
அட இந்த பொண்ணுக்கு யாருப்பா டான்ஸ் மாஸ்டர் -Watch! title=

இணையத்தை கலக்கும் இளம்பெண்ணின் டிரெட்மில்லில் நடன வீடியோ!!

நாம் அனைவரும் நமது உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோகியாமாகவும் உடற்பயிற்சி செவதுண்டு. இன்னும் சிலர் ஜும்பா டான்ஸ் என பல உடற்பயிற்சி நடனங்களை ஆடுவார்கள். தினமும் உடற்பயிற்சி செய்வது போன்று தினமும் உடற் பயிற்சி செய்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். 

சிலர் உடலை குறைப்பதற்காக டிரெட்மில்லில் நடப்பது உண்டு. ஏனென்றால், நாம் வெளியில் நடை பயிற்சியை மேற்கொள்ளாமல் நான்கு சுவற்றுக்குள் நடை பயிற்ச்சி செய்வார்கள். அந்த டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்துகொண்டே நடனமாடுவதை கொஞ்சம் உங்களால் நினைத்து பாருங்கள் கொஞ்சம். அது எப்படி என்று நீங்கள் கூறலாம். ஆனால், அதையும் ஒரு பெண் செய்துள்ளார். 

பிரபல பஞ்சாபி பாடலுக்கு அந்த பெண்மணி டிரெட்மில்லில் நடனமாடிய வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவானது முகநூல் பக்கத்தில்  'மேரா பஞ்சாப்' என்ற பெயரில் உள்ள கணக்கு வெளியிட்டுள்ளது.

நாம் சாதரணமாக டிரெட்மில்லில் நடப்பதற்கே பலமாதம் பயிற்சி எடுக்க வேண்டும். ஆனால், இந்த பெண் அதில் நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிரபல பஞ்சாபி பாடலான "ஜானீ தேரா நா" என்ற பாடலுக்கு அவர் டிரெட்மில்லில் எந்த பிடிமானம் இன்றும் நடனமாடுகிறார். அவர் ஆடுவதை கண்டால் நமக்கும் ஆடவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், அந்த பெண்ணின் ஒவ்வொரு நடன அசைவும் அவ்வளவு அழகாக இருக்கிறது. 

இதோ அந்த வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது...! 

 

Trending News