’எங்க ஆட்டத்த பாருங்க’ நடன கலைஞர்களை புல்லரிக்க வைத்த சிறுமி: Viral Video

நடனக் கலைஞர்களுடன் தெருவில் இறங்கி ஆடிய சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 21, 2022, 02:55 PM IST
  • கர்நாடக சிறுமி போட்ட நடனம்
  • இணையவாசிகளை கவர்ந்துள்ளது
’எங்க ஆட்டத்த பாருங்க’ நடன கலைஞர்களை புல்லரிக்க வைத்த சிறுமி: Viral Video title=

குழந்தைகளின் வீடியோக்களுக்கு எப்போதுமே கண்களை கவரும் வகையில் இருக்கும். மனதை நொடியில் புத்துணர்ச்சியூட்டும் அவர்களின் வீடியோ இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. குழந்தைகள் செய்யும் சேட்டை, ஆடல் பாடல் மற்றும் குசும்புத் தனங்களை மக்கள் ரசிக்க ஆர்வமாக இருக்கின்றனர். இப்போது கர்நாடகாவில் வீதியில் ஆடிக் கொண்டு சென்ற கலைஞர்களுடன் சிறுமி திடீரென புகுந்து அவர்களுடன் ஆடும் வீடியோ இணையவாசிகளின் நெஞ்சில் இடம்பிடித்துள்ளது. 

மேலும் படிக்க | 'நீயா நானா பாத்துடலாம்': குரங்குக்கும் பெண்ணுக்கும் செம சண்டை, ஜெயிச்சது யார்? வைரல் வீடியோ

அந்த வீடியோவில் புலி வேஷம் போட்ட நடனக் கலைஞர்களைக் கொண்ட குழு வீதியில் ஆடிப் பாடிக் கொண்டு வருகின்றனர். அப்போது, பெண் ஒருவர் நடன கலைஞர்களை கவுரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு மாலை அணிவிக்கிறார். அந்தப் பெண்ணுடன் இருக்கும் சிறுமியும் இருக்கிறார். மாலை அணிவித்துவிட்டு அந்தப் பெண் சென்றுவிட, சிறுமி செல்லாமல் கலைஞர்களுடனேயே இருக்கிறார். திடீரென கலைஞர்கள் இசை வாசிக்க, ஒரே ஒரு கலைஞர் மட்டும் நடனமாடத் தொடங்குகிறார். உடனடியாக அந்த சிறுமியும் அவருடன் சேர்ந்து நடனமாடத் தொடங்குகிறது.

சுமார் 23 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலாகியுள்ளது. குழந்தையின் நடனத்தால் ஈர்க்கப்பட்ட பலரும், குட்டி தேவதை, குட்டி தேவதையின் நடனம் சூப்பராக இருந்தது, சிறப்பான நடனமாடிய சிறுமிக்கு வாழ்த்துக்கள், தைரியமாக நடனமாடுவதற்கு ஒரு தைரியம் வேண்டும், அது இந்த சிறுமியிடம் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் நெட்டிசன்கள் அந்த குழந்தைக்கு வாழ்த்துகளை அனுப்பியுள்ளனர். 

இந்த வீடியோ கர்நாடக மாநிலம் உடுப்பியில் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோ பதிவிடப்பட்ட இந்த ஒருவாரத்தில் மட்டும் சமூக ஊடகங்களில் 5.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், சுமார் 31,000 லைக்குகளையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | ’மகளே உன்னால் முடியும்’ தன்னம்பிக்கையூட்டும் தந்தையின் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News