வாழ்க்கையை ஜாலியா எஞ்ஞாய் பண்ணு மாமு! அதுக்காக திமிங்கல சவாரி போறது ஓவர்!

Whale Video Viral: விலங்குகள் வீடியோக்கள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துபவை. விலங்குகள் என்றால் இப்படித் தான் இருக்கும் என நமது மனதில் நினைக்கும் சில விஷயங்கள் இல்லை என்று தெரிய வரும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 23, 2023, 09:53 PM IST
  • பொட்டிப் பாம்பாய் அடங்கும் திமிங்கலம்!
  • அடக்கியாளும் இளைஞர்
  • சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ
வாழ்க்கையை ஜாலியா எஞ்ஞாய் பண்ணு மாமு! அதுக்காக திமிங்கல சவாரி போறது ஓவர்! title=

சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள் எதற்காக விரும்பப்படுகின்றன என்பதற்கு காரணம் எதுவும் சொல்லிவிட முடியுமா என்றால் இல்லை என்று சொல்லலாம். வேண்டுமானால், வித்தியாசமான வீடியோ, இதுவரை பார்த்திராத அதிசயம், அதிர்ச்சி வீடியோ, நெகிழ்ச்சியான காட்சிகள் என சில வீடியோக்கள் இருக்கும். இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் வைரலாகின்றன.

சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைத்தால், சில சமயம் இப்படி எப்படிப்பா என கேள்வியை எழுப்புகின்றன. சில சமயம் ஆச்சரியப்பட வைக்கும் பல வீடியோக்கள் பல சமயங்களில் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, நேரில் பார்க்க முடியாத காட்சிகளை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் இருக்கும் என்பதால், அதுபோன்ற வீடியோக்களும் பலரால் பார்க்கப்பட்டு இணையத்தில் வைரல் ஆகிறது.

விலங்குகள் வீடியோக்கள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துபவை. விலங்குகள் என்றால் இப்படித் தான் இருக்கும் என நமது மனதில் நினைக்கும் சில விஷயங்கள் இல்லை என்று தெரிய வரும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நாய்க்குட்டி முதல் புலிக்குட்டி என பல வீடியோக்கள் பலரால் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வைரல் ஆகின்றன.

மேலும்  படிக்க |   கடவுள் இருக்கான் குமாரு... முட்டையை அபேஸ் செய்த பாம்பிற்கு ஏற்பட்ட கதி!

மனிதர்கள் சவாரி செய்தால், எதன் மீதெல்லாம் செய்வார்கள் என்று யோசித்துப் பாருங்கள். எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் உங்கள் கற்பனைக்கு எட்டாத ஒன்று திமிங்கலத்தின் மீது சவாரி செய்வது.

உண்மை தான், திமிங்கலத்தின் மீது சவாரி செய்யும் மனிதரின் உற்சாகம் பார்ப்பவரையும் தொற்றிக் கொண்டாலும், இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

இந்த வீடியோவைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று சொல்லுங்கள்.  

வைரலாகும் திமிங்கல சவாரி வீடியோ 

பாரசீக வளைகுடாவில் ஒரு ஈரானிய மனிதர் திமிங்கல சுறா மீது சவாரி செய்கிறார். இந்த வீடியோ ஈரானிய சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: பாம்பு எனக்கு பஞ்சுமிட்டாய்... தில்லாக சவாரி செய்யும் தவளை!

இந்த வீடியோ பார்ப்பதற்கு வித்தியாசமானதய் இருப்பதால், பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. சுமார் 2 நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீடியோவில், கடலில் பயணிக்கும் படகு ஒன்றில் இருந்து குதித்து, கடலில் நீந்தும் சுறா மீது படுத்து, நின்று லூட்டி செய்யும் வீரக்கார இளைஞர் ஆச்சரியம் அளிக்கிறார்.

இந்த வீடியோவை முழுதும் பார்த்தால், ஒரு ஷார்ட் திரில்லர் படம் பார்ப்பதைப் போல் இருக்கிறது. இந்த வீடியோவில், இளைஞரும், படகில் இருக்கும் அவரது நண்பரும் பேசுவதும் இரானிய மொழி என்று தெரிகிறது.

பொதுவாக, கடலில் பயணிக்கும்போது, திமிங்கலம், சுறா என எதாவது ஆபத்தான விலங்குகள் தாக்கிவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கும் என்றால், இந்த சாகசக்கார இளைஞரோ சாவகாசமாய், சுறா சவாரி செய்து ஆச்சரியம் ஏற்படுத்துகிறார். இதனால் தான் இந்த வீடியோ வைரலாகிறது.

அதிலும், ஜாலியாய், சுறா சவாரி செய்யும்போது, ஐலசா என பாடும் அவரைக் கண்டால், என்ன மனுசண்டா நீ என்று செல்லமாக திட்டவும் தோன்றுகிறது. அந்த இளைஞரோ, வாழ்க்கையை ஜாலியா எஞ்ஞாய் பண்ணு மாமு என்று சொல்வதைப் போல, சுறா மீது அமர்ந்து விளையாடி விட்டு, படகுக்கு திரும்பும் குறு வீடியோ ஜாலி வீடியோவாக வைரல் ஆகிறது

மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் உறுதி செய்யவோ, பரிந்துரைக்கவோ இல்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News