மனிதகுலத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் வீடியோ! கேண்டிட் வீடியோ

Heart Melting Humanitarian Video: மனிதகுலத்தின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது என்று சொல்பவர்களில் நீங்களும் ஒருவரா? இந்த வீடியோ உங்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 9, 2023, 07:46 PM IST
  • மனிதகுலத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் வீடியோ
  • மனிதாபிமானம் எங்கே இருக்கிறது?
  • கேண்டிட் கேமரா ஷூட் வீடியோ வைரல்
மனிதகுலத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் வீடியோ! கேண்டிட் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வந்தாலும், நமது வாழ்க்கையில் முக்கியமான அங்கமாகிவிட்டது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான வழியாகவும் உள்ள சமூக ஊடகங்கள், மனித வாழ்க்கையில் உள்ள பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் பிரதிபலிக்கிறது. 

பிராந்தியங்கள், நாடுகள், கண்டங்கள் மற்றும் பிற சமமான அளவுருக்கள் முழுவதும் உள்ள சமூகங்கள் மற்றும் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று என்றால், அனைவருக்கும். அந்த பொதுவான அம்சம் பன்முகத்தன்மை, முக்கியமாக பணம் என்பது அனைவரின் அன்றாடத் தேவைகளில் முக்கியமான ஒன்று. தங்கள் நிலை மற்றும் திறமைக்கு ஏற்ப வெவ்வேறு வேலைகளை மக்கள் செய்கிறார்கள். பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசம் அவர்கள் செய்யும் வேலையும் அவர்களின் திறமையும் தான்.

ஒரே தொழிலில் இருக்கும் குறிப்பிட்ட சில நபர்களின் மனப்பான்மையைக் காட்டும் சமூகப் பரிசோதனையில் தெரிய வந்த ஆச்சரியமான விஷயங்கள் நெகிழச் செய்கின்றன.

மேலும் படிக்க | ரவுடி பேபி மனைவியின் வெறித்தாக்குதல்! பாவப்பட்ட கணவர் வீடியோ வைரல்

மனிதர்கள் எந்த நிலையில், எந்த வேலையை செய்து வந்தாலும், மனிதாபிமானமும் நம்பிக்கையும் நேர்மையான மனதை அடிப்படையாகக் கொண்டது என்பதை நிரூபிக்கும் வீடியோ பலராலும் பாராட்டப்படுகிறது.

வைரல் வீடியோ...

இந்த வீடியோ ஒரு POV வீடியோ ஆகும். மறைத்து வைக்கப்பட்ட கேமராவின் மூலம் படமாக்கப்பட்ட இந்த வீடியோவில் ஒரு ஜோடி சாதாரண காலணிகளைப் பார்க்கலாம். ஒரு ஷூவில்கரன்சி நோட்டுகளால் நிரப்பப்பட்டுள்ளது. கேமராவுக்குப் பின்னால் இருப்பவர் செருப்புத் தைக்கும் சிலரிடம் செல்கிறார்.  

மேலும் படிக்க | ப்ரெண்ட்ஸ் 2.0...படமே எடுக்கலாம் போல இருக்கே!! வாய் பிளக்க வைத்த நட்பு... வைரல் வீடியோ

வீடியோவை X வலைதளத்தில் Figen @TheFigen_ என்ற பயனர் பகிர்ந்துள்ளார்: மக்களில் கருணையை அடையாளம் காண்பதற்கான ஒரு அசாதாரண பரிசோதனை இது என்று தெரிகிறது. இதுபோன்ற சோதனைகளை நடத்துவதற்கும், நிதி நிலையைப் பொருட்படுத்தாமல், தேவைப்படுபவர்களுக்கு உதவ மக்கள் முன் வருவார்கள் என்று அந்த வீடியோவில் சொல்லப்பட்டிருப்பது பாராட்டுக்களை பெறுகிறது.  

பண உதவியை முதலில் சிலர் மறுத்துவிட்டார்கள், கடைசியில் ஒருவர் பணத்தைப் பெற்றவுடன், கண்ணீர் விடுகிறார். இந்த வீடியோவுக்கு பல கருத்துக்கள் கிடைத்துள்ளன. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?.

தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | தடவிக்கொடுத்த பெண்... செம ரியாக்ஷன் காட்டிய குரங்கு: வேற லெவல் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News