ஜி. வி. பிரகாஷ் பிறந்தநாள் வாழ்த்து: வீடியோ ஒரு பார்வை!

இன்று பிறந்த நாள் காணும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்க்கு ரசிகரகள் ட்விட்டில் வீடியோ வெளியிட்டுள்ளனர்!

Updated: Jun 13, 2018, 02:21 PM IST
ஜி. வி. பிரகாஷ் பிறந்தநாள் வாழ்த்து: வீடியோ ஒரு பார்வை!

இன்று பிறந்த நாள் காணும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்க்கு ரசிகரகள் ட்விட்டில் வீடியோ வெளியிட்டுள்ளனர்!

ஜி. வி. பிரகாஷ் குமார் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

குறுகிய காலத்தில் 50 திற்கு அதிகமான படங்களுக்கு இசை அமைத்து திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றவர். இவர் இசையமைப்பாளராக மட்டுமின்று, நான் ராஜாவாகப் போகிறேன், டார்லிங், பென்சில், திரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய திரைப்படங்களிலும் காதநாயகனாக நடித்து ஹிட் கொடுத்துள்ளார். 

இந்நிலையில், ஜி. வி. பிரகாஷ் இசை மற்றும் நடிகர் மட்டுமின்று அவ்வபோது சமூக கருத்துகள் கூறி மக்கள் மனதை வென்றவர். முன்னதாக தூத்துக்குடி ஸ்ட்ரைக் மற்றும் நீட் தேர்வு குறித்தும் அவ்வபோது கருத்துகள் வெளியிட்டார் என்பது குறிபிடத்தக்கது.

இந்நிலையில், இன்று பிறந்த நாள் காணும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்க்கு ரசிகரகள் ட்விட்டில் வீடியோ வெளியிட்டுள்ளனர் . தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் விரலாக பரவி வருகின்றது.