வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திருமண விழாக்களில் மணமகன் மற்றும் மணமகளின் தோழர் தோழிகள், அண்ணன் தங்கைகள், உறவினர்கள் என இவர்களால்தான் சபையே களைகட்டும். மணமகனின் நண்பர்கள் பெரும்பாலும் திருமணங்களில் மாப்பிள்ளையை கேலி செய்வதும், கிண்டல் செய்வதுமாக இருப்பார்கள். இவற்றை மணமக்களும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
ஆனால், நகைச்சுவையும், கேலியும் கிண்டலும் ஒரு எல்லை வரைதான் நல்லது. அதன் பிறகு அது நகைச்சுவையாக இருக்காது. இதை எடுத்துக்காட்டும் திருமணத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மேடையில் அமர்ந்திருக்கும் திருமண ஜோடியுடன் மாப்பிள்ளையின் சில நண்பர்களும் இருப்பதை காண முடிகின்றது. அந்த நண்பர்களில் ஒருவர் மாப்பிள்ளையுடன் வேடிக்கையாக விளையாடத் தொடங்குகிறார்.
மேலும் படிக்க | தன்னை தானே விழுங்க முயச்சிக்கும் 6 அடி நீள பாம்பு: வீடியோ வைரல்
அவர் மாப்பிள்ளையின் தலைப்பாகையை கழற்றி மணமகனை தொடர்ந்து தொந்தரவு செய்கிறார். முதலில் மாப்பிள்ளையும் இதை விளையாட்டாகவே எடுத்துக்கொள்கிறார். எனினும், சிறிது நேரம் கழித்து நண்பரின் விளையாட்டு எல்லை மீறத் தொடங்கவே மாப்பிள்ளை கடுப்பாகிறார். அவருக்கு கோவம் வருகிறது. நீண்ட நேரம் பொறுமையாக இருந்த மாப்பிள்ளை ஒரு கட்டத்தில் எழுந்து, நண்பரை சரமாரியாக அடிக்கத் தொடங்குகிறார்.
ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வேடிக்கையான வீடியோவைப் பார்த்தால் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். சிலருக்கு இதை பார்த்தால் சிரிப்பு கூட வரலாம்.
மணமேடையில் நடந்த வினோத சம்பவத்தின் வீடியோவை இங்கே காணலாம்:
मजाक का भी एक दायरा होता है pic.twitter.com/hxdBGlBH7F
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) November 22, 2022
கோபமடைந்த மணமகன் நண்பரை தாக்கினார்
மணமேடையில் நண்பர் பலமுறை கிண்டல் செய்தாலும், மாப்பிள்ளை எல்லோர் முன்னிலையிலும் அவரிடம் எதுவும் சொல்ல முடியாமல் தவிப்பதை வீடியோவில் காண முடிகின்றது. ஆனால் சிறிது நேரத்தில் அவரது பொறுமை எல்லை மீறி விடுகின்றது. யாரை பற்றியும் கவலைப்படாமல், அவர் நண்பனைத் தாக்கத் தொடங்குகிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணும் அவரை தடுக்க முயற்சி செய்வதை வீடியோவில் காண்கிறோம். வேடிக்கையாகவும், அதே சமயம் ஆச்சரியமாகவும் இருக்கும் இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலான வேடிக்கையான வீடியோ
வைரலாகி வரும் இந்த வேடிக்கையான வீடியோ "குல்சார் சஹாப்" என்ற ட்விட்டர் ஐடியுடன் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களையும் நூற்றுக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
மேலும் படிக்க | சிறுத்தையை ஓட விட்ட குரங்கு, இது உனக்கு தேவையா: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ