பெண்ணின் கால் மீது ஏறிச் சென்ற டிரக்; பதற வைக்கும் CCTV காட்சிகள்!

இன்றைய சமூக ஊடக காலத்தில், தினம் தினம் பல விதமான அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 14, 2022, 04:06 PM IST
  • சமூக ஊடகங்களில் வெளியாகும் விபத்து வீடியோக்கள்.
  • சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பெண்ணின் கால் மீது ஏறிச் சென்ற டிரக்; பதற வைக்கும் CCTV காட்சிகள்! title=

இன்றைய சமூக ஊடக காலத்தில், தினம் தினம் பல விதமான அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. 

அந்த வகையில், திருச்சூரில் நடந்த விபத்து தொடர்பான  பயங்கர வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திருச்சூர் ,குன்னுங்குளம் பகுதியை அடுத்த கிழக்கே கோட்டாவில் இன்று காலையில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை, முந்த முயன்ற டாரஸ் லாரியின் பக்கவாட்டுப்பகுதி உரசி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் நிலை தடுமாறு சாலையில் விழுந்துள்ளனர். அப்போது டாரஸ் லாரியின் பின்பக்க சக்கரம் பெண் ஒருவரின் கால் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் பொதுமக்கள் இவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் படிக்க | பேருந்தில் குதிரை போஸ்டர்; தாய் என நினைத்து பின் சென்ற குதிரை குட்டி!

மனம் பதற வைக்கும் டிரக் விபத்து வீடியோவை கீழே காணலாம்:

இது குறித்து திருச்சூர் போலீசார் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் புத்தூர் பகுதியை சார்ந்த கணவன் மனைவியான ராமச்சந்திரன் மற்றும் ரதி என்பதும் தெரியவந்துள்ளது.தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி மற்றும் லாரி டிரைவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.இந்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக, சமூக ஊடகங்களில் வெளியாகும் விபத்து வீடியோக்கள், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் சில நாட்களுக்கு முன், பழுதடைந்த காரை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு நபர்,  கார் தானாக  இயங்கியதில், இருப்பு கேட்டின் மீது மோதி நசுக்கப்பட்டார்.  அந்த சம்பவம் குறித்த வீடியோவும்  சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

மேலும் படிக்க | Horrifying Video: தானாக இயங்கிய கார்... பழுது பார்ப்பவரை மோதி நசுக்கிய பயங்கரம்!

மேலும் படிக்க | சென்னையில் கொடூரம்; நாயை கட்டையால் அடித்து கொலை செய்த மனித மிருகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News