காப்பாத்துங்க.. பொண்டாட்டி படுத்தறா: ஏர் ஹோஸ்டசை உதவிக்கு அழைத்த கணவன், வைரல் வீடியோ

Funny Viral Video: விமானத்தில் கூட கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டால் என்ன செய்வது? ஆம்!! அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 7, 2023, 04:24 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் tehelkaprank's profile picture என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
காப்பாத்துங்க.. பொண்டாட்டி படுத்தறா: ஏர் ஹோஸ்டசை உதவிக்கு அழைத்த கணவன், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

கணவன் மனைவி என்றாலே அவர்களுக்கு இடையில் அனைத்து விதமான உணர்ச்சிகளையும் காண முடியும், அன்பு, பாசம், காதம், கோவம், சந்தேகம், பொறுமையின்மை, பதட்டம் என இருவரும் பல வித உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்கின்றன. திருமணம் ஆகி பல ஆண்டுகள் செல்லச் செல்ல, சண்டையின் அளவும் அதிகமாகும் என வேடிக்கையாக கூறுவது உண்டு. ஆனால், ஆயிரம்தான் அடித்துக்கொண்டாலும், கணவன் மற்றும் மனைவிக்கு இடையிலான பந்தம் மிகவும் அன்னியோன்னியமானது. அடித்துக்கொள்ளாத ஜோடியும் கிடையாது, அன்பு காட்டாத ஜோடியும் கிடையாது. கணவன் மனைவி இடையில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், சில்மிஷங்கள், போட்டிகள் ஆகிவற்றை காட்டும் பல ரீல்களும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

வயது ஆக ஆக, மனைவி சண்டையிட்டால், பெரும்பாலும் கணவன்மார்கள் மவுனமாக, ‘நமக்கு எதற்கு வம்பு’ என ஒதுங்கிவிடுவதை நாம் பல இடங்களில் பார்த்துள்ளொம். தன் மீது தன் மனைவி எந்த ஒரு விஷயத்திற்கும் கோவப்படுவதை எந்தக் கணவனும் விரும்புவதில்லை. கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் சகஜம்தான். சண்டையோ, வாக்குவாதமோ இல்லாத தம்பதிகள் இருக்க மாட்டார்கள். இருப்பினும், விமானத்தில் கூட கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டால் என்ன செய்வது? 

ஆம்!! அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில் திருமணமான தம்பதிகள் விமானத்தில் ஒருவரோடு ஒருவர் சண்டையிடுவதைக் காண முடிகின்றது. 

நடு வானத்தில் அடித்துக்கொண்ட கணவன் மனைவி

வைரலாகி வரும் வீடியோவில், திருமணமான ஜோடி ஒன்று விமானத்தில் பயணிப்பதைக் காண முடிகின்றது. அப்போது கணவன்-மனைவி இடையே ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவாதம் பெரிதாகி, கணவனை அறைய மனைவி கையை நீட்டுகிறார். ஆனால் அவரால் கணவனை அடிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கணவர், உடனடியாக விமானப் பணிப்பெண்ணிடம் உதவி கேட்டு, "என் மனைவி என்னை படுத்துகிறார். தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூறியுள்ளார். இதைக் கண்டு விமானத்தில் அமர்ந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து சிரிக்க ஆரம்பித்தனர். சில பயணிகள் சத்தமாகவே சிரிக்கின்றனர். 

மேலும் படிக்க | Viral Video: இது பீஸ்ட் மோடு... வளர்த்தவரையே புரட்டி எடுக்கும் பூனை

விமானப் பணிப்பெண்ணிடம் உதவி கேட்ட கணவர் 

விமானப் பணிப்பெண்ணிடம் உதவி கேட்டு கணவர் கூச்சலிட்டதை அடுத்து, மனைவியும் கைகளால் முகத்தை மூடிக் கொண்டார். கணவனின் இந்தச் செயலால் கோபமடைந்து, அறைவதற்குக் கையை நீட்டுகிறார். விமானத்தில் அமர்ந்திருக்கும் அனைத்து பயணிகளின் கவனமும் இந்த ஜோடியை நோக்கி செல்கிறது. முன் சீட்டு, பின் சீட்டில் அமர்ந்திருக்கும் அனைவரும் திரும்பி இவர்களை பார்க்கத் தொடங்குகிறார்கள். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டவே அதை விமானத்தில் அமர்ந்திருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, பயனர்களும் இதை பார்த்து சிரித்து பருகின்றனர். 

நடு வானில் சண்டையிட்ட கணவன் மனைவியின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Aryaa (@tehelkaprank)

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் tehelkaprank's profile picture என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். சில பயனர்கள் விமானத்தில் இதுபோன்ற செயலைச் செய்ததற்காக அந்த ஜோடியை விமர்சித்தனர். 

மேலும் படிக்க | பூனைக்குட்டிகளின் கட்டிபிடி வைத்தியம்... மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் க்யூட் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News